Advertisement

அக்கம் பக்கம்

நல்லவரா; கெட்டவரா?

சக அரசியல்வாதிகளை மண்டை காயச் செய்து, குழப்புவதில், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரை, மிஞ்ச யாராலும் முடியாது.கடந்த மூன்று ஆண்டுகளாக, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து வந்தார் நிதிஷ். இதை வைத்து, அரசியல் கணக்கு போட்ட, காங்., தலைவர் சோனியா, விரைவில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.,வை தோற்கடிக்க, பிரம்மாண்ட கூட்டணி அமைக்க முடிவு செய்தார்.எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, சமீபத்தில் டில்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, நிதிஷ் குமாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.இந்த கூட்டத்தில் பங்கேற்பதாக உறுதி அளித்திருந்த நிதிஷ், கடைசி நேரத்தில், 'டேக்கா' கொடுத்து, சோனியா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களை, மண்டை காய வைத்து விட்டார்.அடுத்த நாள், டில்லியில் பிரதமரை சந்தித்து, போட்டோவுக்கு அட்டகாசமாக, 'போஸ்' கொடுத்தார், நிதிஷ். இதைப் பார்த்து வெறுத்துப் போன சோனியா, 'இவரை நம்பினால், எந்த காரியமும் நடக்காது போலிருக்கிறது' என்ற முடிவுக்கு வந்தார்.அடுத்த சில நாட்களிலேயே, இறைச்சிக்காக கால்நடைகள் விற்கப்பட்டதற்கு, தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில், பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்தார் நிதிஷ்.இதையெல்லாம் பார்த்து கடுப்பான காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தலைவர்கள், 'இவர், நல்லவரா, கெட்டவரா; இவரை நம்பலாமா, நம்பக் கூடாதா' என, புலம்புகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement