Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
'ஏசி' யின் மறுபக்கம்
நாடு முழுவதும் மொத்த மின் உற்பத்தியில் 60 சதவீதம் தினமும் 'ஏசி'க்காக தேவைப்படுகிறது. 'ஏசி' பயன்பாட்டை ஒரு சதவீதம் கட்டுப்படுத்தினாலும், இந்திய மின் மொத்த உற்பத்திக்கான பல கோடி ரூபாய் செலவு மிச்சமாகும். வெயில் காலத்தில் குளிர்ச்சி அதிகம் வேண்டும் என்பதற்காக, 'ஏசி'யில் வெப்பநிலையை மிகவும் குறைத்து வைக்கக் கூடாது. 23 டிகிரி செல்சியஸ் தான் சரியான நிலை. இதற்கும் குறைவாக வைத்தால் இயந்திரத்துக்கு அதிக பணிச்சுமையாகும். திணறி இயங்கும் இயந்திரத்தில் சிலசமயம் தீப்பிடிக்கும் அபாயமும் ஏற்படும். அறையின் பரப்பளவு 150 சதுர அடி எனில் ஒன்றரை டன் இயந்திரம் நல்லது. 'ஏசி' மெஷினை அடிக்கடி அணைக்கவும், இயக்கவும் கூடாது.
தகவல் சுரங்கம்
நோன்பு கால ஹலீம்
ஐதராபாத், முத்துக்கள் மற்றும் பிரியாணிக்கு மட்டுமின்றி ஹலீம் உணவிற்கும் பெயர் பெற்றது. ஆண்டு முழுவதும் ஹலீம் கிடைத்தாலும் நோன்பு காலத்தில் மாலையில் கிடைக்கும் ஐதராபாத் ஹலீம் சிறப்பு மிக்கது. புவியியல் குறியீட்டு எண்ணையும் இது பெற்றுள்ளது. ஹலீம் என்றால் பொறுமை என அர்த்தம். பெயருக்கு ஏற்றார் போல், பொறுமையுடன் ஹலீம் தயாரிக்க வேண்டும். மிகக் குறைந்த வெப்பநிலையில் 10 மணி நேரம் தயாரிக்கப்படுகிறது. கோதுமை மாவு, மட்டன், தயிர், வெங்காயம், காய்கறிகள் சேர்த்து ஹலீம் தயாரிக்கப்படுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement