Advertisement

அறிவியல் ஆயிரம்

வெயிலால் அழிந்த நகரம்

கடும் வெயில் ஏற்படுத்திய வறட்சியால், ஒரு நகரமே அழிந்து விடும் என்பதற்கு கம்போடியாவில் உள்ள
அங்கோர்வாட் நகரம் ஓர் உதாரணம். கோயில் நகரான இதன் அழிவுக்கு பல்வேறு அரசியல், சமூக காரணங்கள் கூறப்படுகின்றன. கடந்த 600 ஆண்டுகளுக்கு முன், கடும் வெயிலால் ஏற்பட்ட வறட்சியின் காரணமாகவே இந்நகரம் அழிந்தது என சமீபத்தில் நடந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மரங்களில் காணப்படும் மர வளையங்கள் அந்த மரம் உள்ள இடத்தில் பெய்யும் மழையின் அளவைக் காட்டுகின்றன. இந்நகரில் உள்ள மரங்களின், மர வளையங்களை வைத்து நடத்திய ஆய்வில் மழைப் பொழிவு இல்லாமல் இருந்ததைக் காட்டுகின்றன.


தகவல் சுரங்கம்


குற்றாலப் பூ

குற்றாலத்திற்கே உரிய பூ செண்பகப்பூ. செண்பக மரங்கள் நிறைந்துள்ள பகுதியில் விழும் அருவி என்பதால் தான் செண்பகாருவி என பெயர் பெற்றது.
தங்கநிற செண்பகப்பூ, மஞ்சள் நிற செண்பகப்பூ என இரண்டு வகைகள் உள்ளன. ஆங்கிலத்தில் இதனைச் 'சம்பா' என்பர். இந்தியில் செண்பகப்பூவை 'சம்பக்' என சொல்வர். குற்றாலத்தில் உள்ள இறைவிக்கு செண்பகக் குழல்வாய் மொழி என்று பெயர். செண்பகப்பூவிற்கு ஆண்மைக்குறைவு, கண் அழலை போன்றவற்றைப் போக்கும் இயல்பு உள்ளது. தென்காசி, குற்றாலம், இலஞ்சி, செங்கோட்டை பகுதிகளில் செண்பகவல்லி, செண்பகராமன் போன்ற பெயர்கள் பரவலாக உள்ளன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement