Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம்: தீபா மற்றும் தீபக் இடையில் நடந்தது, சகோதர சண்டை மட்டுமே. அதுகுறித்து, எதுவும் கூற முடியாது.


டவுட் தனபாலு: மேலோட்டமா பார்த்தால், அது சகோதரச் சண்டை தான்... ஆனா, அந்தச் சண்டையில் வெளிப்பட்ட வார்த்தைகளை நீங்க கவனிக்கலையா... ஜெ.,வை கொலை செஞ்சுட்டாங்க என்ற குற்றச்சாட்டை, சட்டத்துறை அமைச்சரான உங்களால் எப்படி எளிதில் கடக்க முடியுது... இதுதானே, பெரும், 'டவுட்'டாக இருக்கு...!


பத்திரிகை செய்தி:
அவினாசியில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற சபாநாயகர் தனபாலை, காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.


டவுட் தனபாலு: மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருப்பதாக அரசு சொல்லி வருது... ஆனாலும், இதுபோன்ற முற்றுகை போராட்டங்கள் தொடருது... நல்லவேளை, 'மிகமிக தாழ்த்தப்பட்ட, சாமானிய குடும்பத்தில் இருந்து வந்த என் வளர்ச்சியைப் பிடிக்காமல், இப்படி நடந்து கொண்டாங்க'ன்னு, வழக்கம்போல சொல்லாமல் விட்டாரே... அதுவரை நல்லது என்பதில், 'டவுட்'டே வேண்டாம்...!


ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார்:
பீஹார் சட்டசபையை கலைத்து விட்டு, முன்கூட்டியே தேர்தலை சந்திக்க தயாரா என, பா.ஜ.,வினர் கேட்கின்றனர்; நாங்கள் தயார். ஆனால், உ.பி., சட்டசபையை கலைத்து விட்டு, அங்கும், புதிதாக தேர்தலை நடத்த, பா.ஜ.,வினர் தயாரா?



டவுட் தனபாலு: உ.பி.,யில் சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்தே சாதிக்க முடியாத விரக்தியில் காங்கிரஸ் இருக்கு... பட்ட காயம் ஆறுவதற்குள் மறுபடியும் களத்துக்கு வரச் சொல்வது, உங்களுக்கே சரியாப்படுதா... இத்தனைக்கும் நீங்க, உ.பி.,யில் போட்டியிடப் போவது இல்லை... இந்தச் சவால், பா.ஜ.,வுக்கா... காங்கிரசுக்கா என்ற, 'டவுட்'டை ஏற்படுத்திட்டீங்களே...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement