Advertisement

அக்கம் பக்கம்

குரு யார்?


காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், தன்னை விமர்சிக்கும், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார் போலிருக்கிறது.'ராகுலுக்கு அரசியல் தெரியாது; பகவத் கீதை, சமஸ்கிருதம் போன்றவை குறித்து, எதுவுமே தெரியாது' என, பா.ஜ.,வினர், அடிக்கடி விமர்சித்து வருவதால், கடுப்பான அவர், பகவத் கீதையை முழுமையாக படிக்கவும், முறையாக, சமஸ்கிருதம் கற்கவும் முடிவு செய்துள்ளார்.இந்த தகவல், காங்கிரஸ் வட்டாரங்களில் கசிந்ததும், 'ராகுலுக்கு, பகவத் கீதை கற்றுத் தரப் போகும் குரு யார்' என்பது பற்றி, பரபரப்பாக பேசப்பட்டது.காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, ஜெய்ராம் ரமேஷ், சமஸ்கிருத மொழியை முழுமையாக கற்றவர். பகவத் கீதையும், அவருக்கு தண்ணீர் பட்ட பாடு.இதனால், 'ஜெய்ராம் ரமேஷ் தான், ராகுலுக்கு குரு' என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேசினர். ஜெய்ராமும், தனக்கு, ராகுலிடமிருந்து எப்போது அழைப்பு வரும் என, வழிமேல் விழி வைத்து காத்திருந்தார்.ஆனால், ராகுலின் விருப்பம், வேறு மாதிரியாக இருந்தது. அரசியலுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத, வேத விற்பன்னர் ஒருவரை, தனக்கு, சமஸ்கிருதம், பகவத் கீதை கற்றுத் தரும் குருவாக நியமித்துள்ளார்.ராகுலின் இந்த நடவடிக்கையால், உற்சாகமிழந்து காணப்படுகிறார், ஜெய்ராம் ரமேஷ்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement