Advertisement

அறிவியல் ஆயிரம்

நாவல் மருத்துவம்

நாவல் பழம் மட்டுமின்றி பட்டை, விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. இவ்வாறு ஒரு தாவரத்தின் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவக் குணம் கொண்டுள்ளதை இயற்கை மருத்துவத்தில் 'சமூலம்' என்பர். பழமும், பழத்தை காய வைத்து அரைத்த பொடியும் சர்க்கரை நோய்க்கு பரிந்துரை செய்யப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கினை நாவல் பழங்கள் கட்டுப்படுத்துகின்றன. நாவல் பழத்தில் கால்சியச் சத்தும், இரும்பு சத்தும் அதிகம் உள்ளதால் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும்
ரத்த சோகைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. உடல்
சூட்டினை குறைக்கும் இயல்பு நாவல் பழத்துக்கு உள்ளது.

தகவல் சுரங்கம்


அமெரிக்க பள்ளிகளின் விடுமுறை

ஜூன் மத்தியில் விடுமுறை விடப்படும் அமெரிக்க பள்ளிகள் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தான் திறக்கப்படுகின்றன. மனப்பாடம் செய்யும் முறைக்கும், மதிப்பெண்களுக்கும் அமெரிக்கப் பள்ளிகளில் முக்கியத்துவம் இல்லை. கிரியேட்டிவிட்டி, புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் தரப்படுகின்றன. எனவே தேர்வு பயம் அமெரிக்கப் பள்ளிகளில் இல்லை.
மாணவர்களுக்கு விடுமுறையின் போது 'புராஜக்ட்' பணிகள் தரப்படுகின்றன. அமெரிக்க பள்ளி மாணவர்கள், விடுமுறையில் நிறைய பயணம் செய்கின்றனர். பயணங்களின் மூலமாக அதிகம் கற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்க கல்வித்துறை நம்புகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement