Advertisement

'டவுட்' தனபாலு

த.மா.கா., தலைவர் வாசன்: பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில், எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்த அனுமதியை, மத்திய, பா.ஜ., அரசு திரும்பப் பெற வேண்டும்.



டவுட் தனபாலு: பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணய உரிமையை, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் முடிவை எடுத்ததே, கடந்த கால மத்திய, காங்., அரசு தானே... அப்போது, நீங்களும் அமைச்சரவையில் தானே இருந்தீங்க... பதவி போன பின்னாடி தான், நாம் செஞ்சதெல்லாம் தவறுங்கறது உங்களுக்கு உரைக்குமோன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!


பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி: தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி நாங்கள் தான். ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கலாம்; ஆனால், இங்குள்ள பிரச்னைகளுக்காக, நாங்கள் தான் போராடிக் கொண்டு இருக்கிறோம்.


டவுட் தனபாலு: எதிர்க்கட்சித் தலைவரா விஜயகாந்த் இருந்த காலத்தில், இதே கருத்தைத்தான் நீங்களும், ஸ்டாலினும் சொல்லி வந்தீங்க... 2016 தேர்தலில், ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரா ஆகிட்டாரு... அப்படீன்னா, உங்களின் போராட்டம் மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தலைன்னு எடுத்துக்கலாமா என்பது தான், என்னோட, 'டவுட்!'


-முதல்வர் பழனிசாமி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோட்டையான, ஈரோடு மாவட்டத்தில், எட்டு தொகுதிகளிலும், அ.தி.மு.க., வென்றது. இதனால், இம்மாவட்டத்தின் தேவைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படுகின்றன.



டவுட் தனபாலு: கொங்கு மண்டலத்துக்கு மட்டும், இந்த அமைச்சரவையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுதுங்கற குற்றச்சாட்டு இருக்கு... அதை நீங்க ஆமோதிக்குறீங்களா... அப்படீன்னா, மற்ற பகுதி, அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்களும், எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ.,க்களும், உங்க மீது அதிருப்தி தெரிவிப்பதில் உண்மை இருக்குன்னு ஒத்துக்குறீங்களா என்பது தான், என்னோட, 'டவுட்!'

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement