Advertisement

அக்கம் பக்கம்

இதெல்லாம் ரொம்ப ஓவர்!



நீண்ட நாட்களாக ஒரு பதவியில் இருந்தவர்களுக்கு, அந்த பதவியை விட்டு வெளியேற, அவ்வளவு சீக்கிரம் மனது வராது போலிருக்கிறது.விரைவில், ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில், தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி மாளிகையிலிருந்து பொட்டியை கட்டுவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்.ஆனாலும், 'அனைத்து கட்சியினரும் சேர்ந்து, நம்மை, மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக தேர்வு செய்துவிட மாட்டார்களா' என்ற ஏக்கமும், ஆசையும் அவருக்கு உள்ளது.ஜனாதிபதி மாளிகையில், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் போது, பிரணாபின் இந்த ஏக்கம், வெட்ட வெளிச்சமானது.ஜனாதிபதி மாளிகையிலிருந்த, பிரணாபின் ஆதார் கார்டு, சமீபத்தில் தொலைந்து விட்டது. அதை எப்படியாவது தேடி பிடிக்கும்படி உத்தரவிட்டார், பிரணாப்.'கடல் போன்ற, பிரம்மாண்டமான ஜனாதிபதி மாளிகையில், ஏராளமான அறைகள் உள்ளன. இதில், மிகச் சிறிய ஆதார் கார்டை எங்கே போய் தேடுவது. வேண்டுமெனில், 'டூப்ளிகேட்' ஆதார் கார்டு
வாங்கலாமே' என, பணியாளர்கள் புலம்பினர்.பிரணாபிடம் இதை கூறிய போது, 'கடைசி நேரத்தில், அனைத்து கட்சியினரும் இணைந்து, என்னை தேர்வு செய்தால், தேர்தலில் போட்டியிட, 'ஒரிஜினல்' ஆதார் கார்டு தேவைப்படும்; அதற்காகத் தான் தேடச் சொல்கிறேன்' என்றார், பிரணாப்.இதை கேட்டு, அதிர்ந்து போன பணியாளர்கள், 'பதவி ஆசை இருக்கலாம்; ஆனால், இந்த அளவுக்கு ஓவராக இருக்கக் கூடாது' என, முணுமுணுக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement