Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
மலர்கள் ஏற்படுத்தும் மாசுபாடு
இந்தியாவில் கோடை காலத்தில், பூக்களின் வரத்தும் விற்பனையும் அதிகம் உள்ளன. காய்கறிகளை விட, மலர்களுக்கு அடிக்கடி தண்ணீரைத் தெளிப்பதால், பூ மார்க்கெட்டில் மாசுபாடு அதிகம். பூ மார்க்கெட்டில் அழுகிய மலர்க்குவியல்கள் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. பூக்களின் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மலர்களை, உலர் பூக்களாக மாற்றி மருந்துப் பொருட்களாக, நறுமணப் பொருட்களாக மாற்றும் நிலை இந்தியாவில் உள்ளது. இதனால் பூக்கள் ஏற்படுத்தும் மாசுபாடு ஓரளவு கட்டுப்படுத்தப்படுகிறது. 'பயோ மாஸ் தெர்மல் பவர் பிளான்ட்' அமைத்தால், மலர் வணிக வளாகத்தின் மலை போன்ற கழிவுகளை மேலாண்மை செய்யலாம்.

தகவல் சுரங்கம்



குழந்தை தொழிலாளர்களின் மாநிலங்கள்
உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் ஜூன் 12ல் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக குழந்தை தொழிலாளர்கள் உள்ள மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. பீகார், ராஜஸ்தான், மத்தியபிரதேம், மகாராஷ்டிரா மாநிலங்கள் அடுத்து உள்ளன. குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்கள் பள்ளி சென்று வந்து, மாலையில் பகுதிநேரமாக பணி செய்வதும் குற்றம். விடுமுறை நாட்களிலும் அவர்களைப் பணியமர்த்தக் கூடாது. குழந்தைகளை வைத்து பொருட்களை விற்பனை செய்வதும் குற்றம். சுற்றுலா அதிகம் உள்ள இடங்களில், குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்ற இடங்களை விட அதிகமாக உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement