Advertisement

'டவுட்' தனபாலு

முதல்வர் பழனிசாமி: ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற ஸ்டாலினின் முயற்சி பலிக்கவில்லை. அவர் விரக்தியில் பேசி வருகிறார். சந்தர்ப்பவாதியாக செயல்படுகிறார்.

டவுட் தனபாலு:
ஸ்டாலினாவது இந்த அரசை மட்டும் தான் தாக்குறாரு... உங்க கட்சியைச் சேர்ந்த பன்னீர் அணியினரோ, ஆட்சியை மட்டுமின்றி, கட்சியையும் கைப்பற்ற மும்முரமா செயல்பட்டு வர்றாங்க... ஸ்டாலினை விமர்சிக்கும் வேகத்தை, இவர்களிடம் ஏன் காட்ட மாட்டேங்குறீங்க... இது, பாசத்தின் வெளிப்பாடா... பயத்தின் வெளிப்பாடா என்பது தான், மக்களின், 'டவுட்!'

தேசியவாத காங்., தலைவர் சரத் பவார்: மூன்றாண்டு கால, பா.ஜ., ஆட்சியில் பொருளாதாரம், விவசாயம், அன்னிய முதலீடு ஆகியவை குறைந்துவிட்டது. பெரும்பாலான மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

டவுட் தனபாலு:
அப்புறம் ஏன், மஹாராஷ்டிரா, பா.ஜ., அரசுக்கு சிவசேனா அளிக்கும் ஆதரவை விலக்கிக் கொண்டால், ஆதரவளிப்பது குறித்து பரிசீலிப்போம்னு சொன்னீங்க... இப்போ, கோவாவில், பா.ஜ., அரசு அமைய, ஆதரவு அளித்தீங்க... 'ஜனாதிபதி தேர்தலில் சரத் பவார் போட்டியிட விரும்பினால், அவர், பா.ஜ., கூட்டணியில் இணைய வேண்டும். அவருக்கு எங்கள் கட்சி ஆதரவு அளிக்கும்'னு, சில நாட்களுக்கு முன், இந்திய குடியரசு கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தாரு... இதைப் பத்தி, பா.ஜ., வாயே திறக்கலை... அந்த அதிருப்தியில் தான், இந்த விமர்சனமோ என்ற, 'டவுட்' வருதே...!

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்: ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும், அ.தி.மு.க., அரசு, எந்த குளங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தி.மு.க., சார்பில் நீர்நிலைகளை துார்வாரி வருகிறோம்.

டவுட் தனபாலு: ஆறு வருஷமா நடவடிக்கை எடுக்கலை என்பதற்காக, நீங்க களத்தில் குதித்தீங்களா... இத்தனை வருடம் ஆட்சியில் இருந்தபோது, எந்த நம்பிக்கையில் காத்திருந்தீங்க... ஜெ., மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள சறுக்கலை பயன்படுத்தி, மக்களிடம் நற்பெயரைச் சம்பாதிக்கத்தான், துார்வாரும் பணியை, தி.மு.க., மேற்கொள்ளுதுங்கற விமர்சனம் இருக்கே... அதைப் பத்தி உங்க கருத்து என்னங்கறது தான், என்னோட, 'டவுட்!'

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement