Advertisement

அக்கம் பக்கம்

அச்சு - பினராயி குடுமிப்பிடி!

கேரள மாநிலத்தில், மார்க்., கம்யூ., கட்சித் தலைவர்களிடையே, 'டிஷ்யூம்' நடப்பது, நாள் ஒரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நடந்தேறி வருகிறது. குறிப்பாக, ஆளுங்கட்சியில் உள்ள அச்சுதானந்தனுக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும் பயங்கர குடுமிப்பிடி ஓடுகிறது.

விழிஞ்ஞம், என்ற ஊரில், 6,500 கோடி ரூபாய் செலவில் தனியார் பங்களிப்புடன் துறைமுகம் அமைக்கும் பணி நடக்கிறது. இது, காங்., ஆட்சியில் முதல்வராக இருந்த உம்மன்சாண்டி துவக்கி வைத்த திட்டம். கேரளாவுக்கு நன்மை பயக்கும் என்பதால், பினராயியும் இதைத் தொடர்கிறார். ஆனால், திட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட நாள் முதலே எதிர்ப்பு தெரிவிக்கும் அச்சுதானந்தன், தன் பிடியிலிருந்து விலகவே இல்லை.

போதா குறைக்கு, துறைமுக திட்டம் தொடர்பாக, 'ஆடிட்' அறிக்கையில் பல முறைகேடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதால், இதை உடும்புப் பிடியாகப் பிடித்துள்ளார் அச்சு. 'இந்த அறிக்கையை ஏற்று விசாரணை நடத்தி, அதன் முடிவு வரும் வரை, பணிகளை நிறுத்த வேண்டும்' எனக் கூறுகிறார். பினராயியோ, 'முறைகேடு நடைபெற்றிருந்தால் அது பற்றி விசாரணை
தனியாக நடக்கும்; பணிகளை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை' எனக் கூறி வருகிறார்.

இதைக் கேள்விப்பட்ட மற்ற அமைச்சர்கள், 'இவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிறது தாங்கலே... துறைமுகம் உருவாகி, கப்பல் ஓடுற வரைக்கும் அடிச்சிப்பாங்க போல...' என, எள்ளி நகையாடுகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement