Advertisement

'டவுட்' தனபாலு

அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் சம்பத்: கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற, தினகரன் எடுக்கும் முயற்சிகள், வரும் காலத்தில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் மிகப்பெரிய மதிப்பை பெற்றுத் தரும்.


டவுட் தனபாலு: ஆர்.கே.நகர் வேட்பாளர்களை, 'கவனித்தது' போலவும், தேர்தல் கமிஷன் அதிகாரிகளை, 'கவனிக்க' முயன்றது போலவும், உங்களின் வழக்கமான பாணியில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை கவர ஏதும் திட்டம் போட்டிருக்கீங்களோ என்ற, 'டவுட்' எழுதே...!



சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சிறந்த வகையில் வழிநடத்தும் அதன் தலைவர் மோகன் பாகவத், ஜனாதிபதி பதவிக்கு மிகப் பொருத்தமானவர்.



டவுட் தனபாலு: நீங்க குறிப்பிடும் மோகன் பாகவத்தே, தனக்கு விருப்பமில்லைன்னு சொல்லிட்டாரு... அதன்பின்னும், அவரது பெயரை நீங்க பரிந்துரைப்பது ஏன்... கூட்டணிக் கட்சியான, பா.ஜ.,வுக்கு நெருக்கடி கொடுக்கணும்; இந்துத்துவா கொள்கையில் சிவசேனா மட்டும் தான் உறுதியாக இருக்கு என்பதை காட்டிக் கொள்ளத் தானோ என்ற, 'டவுட்' வருதே...!



பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா:
ஜனாதிபதி தேர்தலில், தமிழகத்தில் இருக்கும் சட்டசபை உறுப்பினர்களின் ஓட்டுகளை கணக்கில் எடுக்காமலேயே, பா.ஜ.,வுக்கு உபரி ஓட்டுகள் உள்ளன. அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ.,க்கள், தோற்கக்கூடிய வேட்பாளருக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்.



டவுட் தனபாலு: 'எதிர்ப்புக் காட்டுறேன்கற பேர்ல, எதிர் தரப்பு வேட்பாளருக்கு ஆதரவு அளிச்சிடாதீங்க... எப்படியும், பா.ஜ., முன்னிறுத்தும் வேட்பாளர் தான், ஜனாதிபதி ஆவாரு... மாநில அரசில் உங்க பூசல் நாளுக்கு நாள் வலுத்து வருது... பார்த்துங்க... நீங்களே உங்களுக்கு ஆப்பு வெச்சுக்காதீங்க' என்பதைத் தான், இவ்வளவு நாசுக்கா சொல்லிக் காட்டுறீங்களோ என்ற, 'டவுட்' ஏற்படுதே...!



பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி:
நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தாலும், பா.ம.க.,வுக்கு எந்த பாதிப்பும் வராது. புதிதாக யார் அரசியல் கட்சி துவங்கினாலும், பா.ம.க.,வுக்கு பின்னடைவு ஏற்படாது.




டவுட் தனபாலு: உங்களுக்கு பாதிப்பு இல்லைன்னா, அரசியலுக்கு வந்து அடிபடட்டும்னு அமைதியா விட்டுட வேண்டியது தானே... இது, பா.ம.க.,வின் பயத்தை வெளிப்படுத்தலை என்றால், ரஜினி மீதான பாசத்தை வெளிப்படுத்துகிறதா என்பது தான், மக்களின், 'டவுட்!'



தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: தமிழகத்தில், பா.ஜ., புறவழியாக வர வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ., விரைவில் கால் ஊன்றும்.


டவுட் தனபாலு: 'நாடு முழுக்க பா.ஜ., வளர்ந்து வருது... தமிழகத்தைத் தவிர'ன்னு, உங்க கட்சி மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாகப் பேசி வர்றாங்க... இப்படி ஏதாவது நம்பிக்கையாகப் பேசினால் தான், நம்ம கட்சிப் பதவியை தக்க வைக்க முடியும்னு, 'அடிச்சு' விடுறீங்களா... உங்களின் இந்தக் கருத்தை, உங்க கட்சிக்காரர்களே நம்புவது, 'டவுட்' தான்...!



வி.சி., தலைவர் திருமாவளவன்
: ரஜினிகாந்தை, தமிழக முதல்வராக்க தடை செய்தோமானால், அவர் இந்த நாட்டின் பிரதமராகி விடுவார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement