Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
குற்றால வயாக்ரா
குற்றால சீசனில் கிடைக்கும் ஜாதிக்காய் ஊறுகாய், மன்னர்கள் காலத்தில் இயற்கை வயாக்ராவாக பயன்படுத்தப்பட்டது. உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை துாண்டும் இயல்பு ஜாதிக்காய்க்கு உள்ளது. ஆயுர்வேத உளவியலில் மன அழுத்தத்தைப் போக்க ஜாதிக்காய் பரிந்துரை செய்யப்படுகிறது. கேரளாவில் ஜாதிக்காய் கொட்டையில் இருந்து எண்ணெய், வெண்ணெய் தயாரிப்பர். கொழுப்பை குறைப்பதால் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஜாதிக்காய் சேர்ப்பர். ஜாதிக்காய் உற்பத்தியில் இந்தோனேஷியா முன்னணியில் உள்ளது.
தகவல் சுரங்கம்
குளிக்க முடியாத அருவிகள்
குற்றாலத்தில் அருவிகள் சுற்றுலா தலங்களாக உள்ளன. ஆனால் இந்தியாவில் மிகவும் உயரமான அருவி என்ற சிறப்பினைப் பெற்றுள்ள நோக்காலிகா அருவி, அதன் இயற்கை அமைப்பால் பயன்படாமல் உள்ளது. இந்த நோக்காலிகா அருவி இந்திய வங்கதேச வட எல்லைக்கு 25 கி.மீ., துாரத்தில் உள்ளது. மேகாலயாவில் அதிகளவில் பெய்யும் மழையினால், இந்த அருவியில் வற்றாத நீர் வளம் இருக்கும். அருவியில் விழும் நீரும் தேக்கி வைத்துப் பயன்படுத்த முடியாத அளவுக்கு இயற்கை அமைப்பு உள்ளது. மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக அருவி இருந்தாலும், அருவியின் நீர் இந்தியாவுக்குப் பயன்படாமல் வங்கதேசத்திற்குத்தான் பயன்படுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement