Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
கால்நடைகள் வரமா? சாபமா?
ஒரு வீட்டின், சமுதாயத்தின், நாட்டின் வளமாக கால்நடைகளைக் கூறுவர். வளிமண்டலத்தில் மனிதர்களால் வெளியேற்றப்படும் வாயுக்களில், 18 சதவீதம் கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை சார்ந்த தொழில்களால் வெளியேற்றப்படுகின்றன. பசுமை இல்ல வாயுவான மீத்தேனில் 37 சதவீதம் அசை போடும் விலங்குகளின் உணவு செரித்தலினால் வெளியேற்றப்படுகிறது. இந்தியா, உலகில் பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்தாலும், இந்தியாவில் சராசரியாக ஒரு பசு ஆண்டுக்கு ஓர் ஆயிரம் கிலோ பால் மட்டுமே உற்பத்தி செய்கிறது. ஆனால் உலகளவில் ஒரு பசு ஆண்டுக்கு 3 ஆயிரம் கிலோ பால் உற்பத்தி செய்கிறது.
தகவல் சுரங்கம்
பசுவை போற்றும் ஊர்கள்
மாட்டிறைச்சி தடையை தொடர்ந்து, இந்தியாவின் தேசிய விலங்காக பசுவை அறிவிக்க வேண்டும் என்ற வாதங்கள் வலுத்து வருகின்றன. அண்டை நாடான நேபாளத்தின் தேசிய விலங்காக பசு உள்ளது. இந்தியாவின் சிறிய மாநிலமான கோவாவின் பழைய பெயர் கோமந்தா. தவிர, கோபக்கபுரி, கோவபுரி, கோவம் போன்ற பெயர்களும் கோவாவுக்கு இருந்தன. 'பசுக்கள் நிறைந்த பகுதி' என்பதையே அனைத்துப் பெயர்களும் குறிக்கின்றன. மகாராஷ்டிராவில் வார்தா மாவட்டத்தில் உள்ள கோபுரி எனும் கிராமத்தின் பெயர் பசுவை சிறப்பிக்கும் வகையில் உள்ளன. கோபுரியில் தான் பசு பாதுகாப்பு இயக்கத்தின் தலைமையகம் உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement