Advertisement

இது உங்கள் இடம்

நிறுத்துங்கள் திருநாவே!

ச.ஜான் பிரிட்டோ, திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க.,வில், முதல்வர் பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகின்றன. தற்போது, சிறையில் இருந்து விடுதலையான, தினகரன், மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.-அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து, காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், 'மூன்று அணியாக, அ.தி.மு.க., பிரிந்து உள்ளதால், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க, அக்கட்சியினர் அஞ்சு கின்றனர்' என, கூறியுள்ளார். இது, பித்தளையைப் பார்த்து பல்லிளித்த ஈயம் என்ற பழமொழியை நினைவூட்டுகிறது.காங்கிரசில் எத்தனை அணிகள் உள்ளன என்பதை, திருநாவுக்கரசரால் கூற முடியுமா... அவரால் மட்டுமல்ல, யாராலுமே கணக்கிட்டுச் சொல்ல முடியாது. சோனியாவின் மருமகனான, ராபர்ட் வதேரா முதல், ரங்கோலி ஆடுபவர் வரை, ஆளாளுக்கு ஒரு கோஷ்டி வைத்துள்ளனர். மொத்தத்தில், காங்கிரஸ் என்பதை விட, 'கேங் ரஸ்' என்றழைப்பதே பொருத்தமாக இருக்கும்!கட்சி தாவியவரின் தலைமையில், ஒரு மாநிலத்தில் தேசிய கட்சி என்றால், அது காங்கிரசில் மட்டுமே சாத்தியம். அந்த வகையில் பார்க்கும் போது, அ.தி.மு.க., கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை திருநாவுக்கரசரால் மறுக்க முடியுமா...சமீபத்தில், காங்கிரஸ் தலைமையகம், சத்தியமூர்த்தி பவனில் மகளிர் அமைப்பினரிடையே பயங்கர மோதல் வெடித்தது; ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். அங்கு, திருநாவுக்கரசரும் இருந்தார். கட்சி அலுவலகத்திற்குள், ஒரு நாளாவது சண்டை சச்சரவு இன்றி கூட்டம் நடந்தது உண்டா, மிஸ்டர் திருநாவுக்கரசரே!மூன்று அணியானாலும், இன்றும், அ.தி.மு.க., கட்டுக்கோப்பாகத் தான் உள்ளது. திருநாவுக்கரசரின் கருத்தை, அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் இளங்கோவனே கேட்க மாட்டார். தன் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலை நீக்க வழி காணாமல், மற்ற கட்சிகளுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்துங்கள், திருநாவுக்கரசரே!
அரசியலில்எள்ளி நகையாடநாங்களா கிடைச்சோம்!

சி.துரைராஜ், நெல்லித்தோப்பு, புதுச்சேரி மாநிலத்திலிருந்து எழுதுகிறார்: பிராமணர்களை இழிவுபடுத்தியும், தாக்கியும், இதே பகுதியில் பலர் கடிதம் எழுதி வருகின்றனர்.பிராமணர் இல்லாமல் மற்றவர்கள், ஒரு செயலும் செய்ய முடியாது; ஐதீக முறைப்படி வாழ்வோர், மற்றவர்களுக்குஒருபோதும் தீங்கு நினைக்க மாட்டார்கள்!எந்த உயிரினங்களுக்கும், பிராமணர் கெடுதல் செய்ய மாட்டார்கள். பலர் வீடுகளில், ஆடு, கோழி, புறா என வளர்க்கின்றனர். உறவினர்கள் வந்தால், ஆட்டையும், கோழியையும் சமைத்து சாப்பிடுகின்றனர்.பிராமணர் வீடுகளில் பசு வளர்க்கின்றனர்; அதை தெய்வமாக வழிபடுகின்றனர். வெள்ளி கிழமைகளில், பசுவை குளிப்பாட்டி, பொட்டு வைத்து சாம்பிராணி துாபம் போட்டு, இன்னும் பலர் பூஜை செய்கின்றனர்.பிராமணர் இன்றி, எந்த வீட்டிலும் விசேஷம் நடைபெறாது. புதிதாக வீடு கட்ட பூமி பூஜை, வீடு கட்டிய பின், கிரஹப்பிரவேசம் என அனைத்திற்கும் பிராமணர் தேவை.திருமணத்திற்கு நாள் பார்த்து நிச்சயதார்த்தம் செய்யவும், திருமணத்தை நடத்தி வைக்கவும் தேவைப்படுகின்றனர்.இப்படி பல நல்ல காரியங்களுக்கு மட்டுமல்ல, யாராவது இறந்து விட்டால், காரியம் செய்வதற்கும், ஒரு ஆண்டு ஆனவுடன் தெவசம் கொடுப்பதற்கும் பிராமணர் தேவை. இப்படி ஒவ்வொரு குடும்பத்தின், ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும், பிராமணர் உதவி தேவைப்படுகிறது.தி.மு.க., தலைவர் கருணாநிதி, நாத்தீகவாதி. ஆனால், அவர்கள் குடும்பத்தினர், கோவில் கோவிலாக சென்று, சுவாமி, அம்மன் தரிசனம் செய்கின்றனர். அவர்கள் குடும்பத்தினரே, நாள், நட்சத்திரம் பார்க்க, பிராமணர்களை தானே தேடுகின்றனர்.ஆனால், அரசியலில் எள்ளி நகையாட மட்டும், அவர்களுக்கு இளிச்சவாயர்களாக, பிராமணர்கள் தெரிகின்றனர் போலும்!


தேர்வு நடத்தும்அதிகாரம் துறைவசம் வேண்டாம்!
பொன்.கருணாநிதி, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கால்நடை பராமரிப்புத் துறையில், கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப, எழுத்துத் தேர்வு நடத்த வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டது.அதன் அடிப்படையில், இப்பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கோரி, நாளிதழ்களில் விளம்பரம் வெளியானது.லட்சக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள், உரிய முறையில் விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளாகிறது. இன்று வரை, தேர்வுக்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை; என்ன காரணம் என்றும் தெரியவில்லை.இந்த தாமதத்திற்கு காரணமான அலுவலர்கள் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பயிற்சிக்கான எழுத்துத் தேர்வு முடிந்து, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி நியமனம் கிடைக்காது.தேர்ச்சி பெற்றவர்கள், தங்கள் சொந்த செலவில், மேலும் ஓராண்டு கால்நடை ஆய்வாளர் சான்றிதழ் படிப்பு முடித்த பின் தான், பணி நியமனம் கிடைக்கும்.கால்நடை ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு தயாரானவர்களுக்காக, தனி புத்தகங்கள் சமீபத்தில் தான் வெளிவந்து உள்ளன. சில பயிற்சி மையங்களும், இத்தேர்வுக்கான பயிற்சி கட்டணத்தை வசூலித்து காலம் கடத்தின.வேலையற்ற பட்டதாரிகளின் இந்நிலையை கவலையோடும், கருணையோடும் கவனித்து, தேர்வை உடனடியாக நடத்த வேண்டும்.பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் பொறுப்பை, அந்தந்த துறையிடம் ஒப்படைப்பதை தவிர்த்து இருந்திருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், இத்தேர்வுகளை நடத்தி இருந்தால், தாமதம் தவிர்க்கப்பட்டிருக்கும்.கால்நடை ஆய்வாளர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமே, மாநில அரசு தேர்வுகளை நடத்த வேண்டும்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (7)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement