Advertisement

'டவுட்' தனபாலு

இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன்: அ.தி.மு.க., பல அணிகளாக இருந்தாலும், அனைத்து அணிகளையும், பா.ஜ., தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

டவுட் தனபாலு: அந்த பல அணிகளில், ஒரு அணித் தலைவர் கூட, இதைப்பத்தி மூச்சுவிடலையே... அவர்களை விட்டுத் தள்ளுங்க... அக்கட்சித் தொண்டர்கள் யாரும், இதை எதிர்க்கலையே... அப்படீன்னா, 'இவங்களை எல்லாம் யாரோ ஒருத்தர் மேல இருந்து தட்டி வெச்சாத் தான் சரியா இருக்கும்'னு, கட்சியினர் நினைச்சுட்டாங்களோ என்ற, 'டவுட்' வரலையா...!


-வி.சி., தலைவர் திருமாவளவன்: தலித் மக்களையும், பழங்குடியினரையும் வைத்து அரசியல் செய்து வருவதால், ஜனாதிபதி வேட்பாளராக, தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை, காங்., இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து நிறுத்த வேண்டும்.



டவுட் தனபாலு: ஜனாதிபதி தேர்தலில் தான் உங்க கட்சிக்கு ஓட்டு இல்லையே... நீங்க என்னவேணாலும் பேசலாம்... ஒருவேளை உங்களுக்கு, எம்.எல்.ஏ., -- எம்.பி., இருந்து, தலித் அல்லது பழங்குடியினரை, பா.ஜ., வேட்பாளராக முன்னிறுத்தியிருந்தாலும், அவர்களை ஆதரித்து இருப்பீங்களா என்பதே, 'டவுட்' தான்... இதெல்லாம், ஊருக்குத் தான் உபதேசங்கற மாதிரி தான்...!



பத்திரிகை செய்தி: மத்திய பிரதேசத்தில் நிலைமை மோசமடைவதை தடுக்க, ஆறு லட்சம் விவசாயிகளுக்கு, 6,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, கடன் சமரச திட்டம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.



டவுட் தனபாலு: விவசாயிகள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து, ஒரு வாரமா போராடிய போதே இதை அறிவித்திருக்கலாமே... வாகனங்களுக்கு தீ வைப்பு, பொதுச் சொத்துகளுக்கு சேதம், துப்பாக்கிச் சூட்டில் ஐந்து விவசாயிகள் பலிங்கற அளவுக்குப் போன பின் தான், அரசுக்கு, ஞானோதயம் வருமோ என்ற, 'டவுட்' ஏற்படுதே...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement