Advertisement

அக்கம் பக்கம்

விசுவாசத்தின் சிகரம்!

விசுவாசம் காட்டுவதில், காங்கிரஸ்காரர்களை முந்த யாருமில்லை என்று சொல்லலாம்; வேறு கட்சி மாறிப் போனாலும், தமக்கு நன்மை செய்தவர்கள் என்றால், பாசம் காட்டாமல் விட மாட்டார்கள்.அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம், சமீபத்தில் மும்பையில் நடந்தது.உ.பி.,யில் முன்னாள் முதல்வர் பகுகுணாவின் மகளான ரீட்டா பகுகுணா, காங்., சார்பில், 'கெத்து' காட்டி வந்தார். ராகுல் தலையெடுத்த பின், ரீட்டாவை ஓரங்கட்ட ஆரம்பித்தார். ரீட்டாவுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் உறுப்பினர்களை கொம்பு சீவி, அழகு பார்க்கத் துவங்கினார்.சமீபத்திய, உ.பி., தேர்தலில், முதல்வர் வேட்பாளராக தன்னை ராகுல் அறிவிப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரீட்டா, ஏமாந்து, வெகுண்டெழுந்து, பா.ஜ.,வில் சேர்ந்து விட்டார்.பா.ஜ.,வில் அவருக்கு செமத்தியான வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்போது குஷியில் இருக்கிறார் ரீட்டா.சமீபத்தில், உ.பி.,யிலிருந்து மும்பைக்கு வந்தார் ரீட்டா. அவரை வரவேற்க, பா.ஜ., உறுப்பினர்கள் நிறைய பேர், விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்; அவர்கள் நின்றிருந்த எதிர்திசையில் காங்கிரஸ் உறுப்பினர்களும் நின்றிருந்தனர். பா.ஜ.,வினருக்கு ஒன்றும் புரியவில்லை.ரீட்டா வந்திறங்கியதும், அவரை வரவேற்க, பா.ஜ.,வினரோடு, காங்கிரஸ்காரர்களும் ஓடோடி வந்தனர். ரீட்டா அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியாகக் கையசைத்தார். கூடவே, பா.ஜ.,வினரின் அதிர்ச்சியையும் நோட்டம் விட்டவர், 'பதற்றப்படாதீங்க... இவங்க, எனக்கு ரொம்ப காலமா விசுவாசமா இருக்காங்க... என்னைப் பார்த்து குசலம் விசாரிக்க மட்டுமே வந்திருக்காங்க...' எனக் கூறிச் சமாளித்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement