Advertisement

பக்க வாத்தியம்

வாசன் ஆதரவாளர் போட்ட வாய்பூட்டு!


சென்னை, ராயப்பேட்டையில், த.மா.கா., சார்பில், தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநில நிர்வாகி நந்து, தலைமை வகித்தார். தண்ணீர் பந்தலை, த.மா.கா., தலைவர் வாசன் திறந்து வைத்து, நிருபர்களிடம் கூறுகையில், 'தமிழகம் முழுவதும், குடிநீர் பஞ்சம் உள்ளது. பெண்கள் காலி குடங்களுடன் பரிதவிக்கின்றனர். அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் தாகத்தை தீர்க்க, த.மா.கா., களம் இறங்கி உள்ளது' என்றார்.'டிவி' நிருபர் ஒருவர், 'தண்ணீர் பந்தலை, வாசன் திறந்து வைத்து சென்ற மறுநாளிலிருந்து, பானை இருக்கும், தண்ணீர் இருக்குமா...' என, சக நிருபர்களிடம், 'கமென்ட்' அடித்தார். வாசன் ஆதரவாளர் ஒருவர், 'இப்படி, எடக்கு முடக்கா பேசுவீங்கன்னு தெரிஞ்சு தான், பிளாஸ்டிக் கேன்ல, தண்ணீர் வைச்சு, அதற்கான செலவு ரசீதுகளை, காட்டணும்னு, நிர்வாகிகளிடம் சொல்லி வைச்சிட்டோமே...' எனக் கூறி, நிருபரின் வாயை அடைத்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement