Advertisement

கோவையின் 112 அடி ஆதியோகி திருமுகத்திற்கு கின்னஸ் விருது

தமிழகத்தின் கோவையில் அமைந்துள்ள 112 அடி ஆதியோகி திருமுகச்சிலைதான் உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலை என்று கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது.

இதை பற்றி கின்னஸ் உலக சாதனை புத்தகம் கூறுவதாவது :
" உலகிலேயே மிகப்பெரிய மார்பளவுச் சிலையின் அளவு - உயரம் 34.24 மீட்டர் 112 அடி 4 அங்குலம்
அகலம் 24.99 மீட்டர் 81 அடி 11.8 அங்குலம்
நீளம் 44.9 மீட்டர் 147 அடி 3.7 அங்குலம்.
இந்த சாதனையை தமிழ்நாட்டின் ஈஷா அறக்கட்டளை செய்ததாக 11 மார்ச் 2017 அன்று உறுதி செய்கிறோம்."

இந்த சாதனை ஈஷாவிற்கு கிடைத்துள்ள இரண்டாவது கின்னஸ் சாதனை விருதாகும்.ஏற்கனவே ஈஷா அறக்கட்டளை அக்டோபர் 17 2006 அன்று 852,587 மரக்கன்றுகளை, தமிழ்நாட்டில் நட்டதற்காக கின்னஸ் சாதனை அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாபெரும் திருமுகச்சிலையை வடிவமைக்க 2.5 ஆண்டுகள் ஆனதாகவும் , அதை நிர்மாணிக்க 8 மாதங்கள் மட்டுமே ஆனதாகவும், அதற்கு காரணம் இதன் கட்டுமானத்தில் ஈடுபட்ட தன்னார்வ தொண்டார்களின் அர்ப்பணிப்பு தான் என்றும் ஈஷாவின் நிறுவனர் சத்குரு அவர்கள், இச் சிலை திறப்பின் போது கூறியிருந்தார்.

மக்களுக்கு ஊக்கம் ஊட்டிடும் ஒரு பிரம்மாண்ட அடையாளம் தான் இந்த முகம். மனிதர்கள் தன்னிலை மாற்றத்தை கொண்டு வர விரும்பினால், அதற்கான தீர்வை தங்களுக்குள்ளேயே தேடி உணர்ந்திட ஆதியோகி ஒரு அடையாளமாக, குறியீடாக இருந்து ஊக்குவித்திட அமைந்துள்ளார்.
முதல் யோகியான ஆதியோகி, மனிதனின் தன்னிலை மாற்றத்திற்கான 112 வழிமுறைகளை வழங்கினார். அதன் குறியீடாகவே112 அடி உயரச் சிலை அமைந்துள்ளது.

யோக பாரம்பரியத்தில் சிவனை யோக விஞ்ஞானத்தின் மூலமான முதல் யோகியாக குருவாக பார்க்கின்றனர்.

இதை போன்று மேலும் மூன்று 112 அடி முகங்கள் இந்தியாவின் மூன்று மூலைகளில் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Guinness World Record listing - http://www.guinnessworldrecords.com/world-records/458751-largest-bust-sculpture

மேலும் தகவல்களுக்கு - 9442641563, 8903816461

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (8)

 • ganapati sb - coimbatore,இந்தியா

  PSG CIT GCT அமிர்த போன்ற பொறியியல் வேளாண்மை மற்றும் பாரதியார் பல்கலைக்கழகங்களை விட்டுவிட்டேன். அவைகளும் கோவையின் பெருமையே.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  சிறுவாணி அத்திக்கடவு சுவையான குடிநீர் முதல் மருதமலை பேரூர் ஈச்சனாரி கோனியம்மன் கோயில்கள் ஆனைக்கட்டி பேரூர் சரவணப்பட்டி ஆசிரம ஆதீனங்கள் நூற்பாலை கிரைண்டர் மிக்ஸி பம்ப் செட் ஆலை LMW PRICOL பன்னாட்டு நிகர் நிறுவனங்கள் அன்னபூர்ணா ஹோட்டல் கிருஷ்ண ஸ்வீட்ஸ் மற்றும் நீர்வளம் காக்கும் சிறுதுளி போல ஆதியோகி எங்கள் கோவையின் மாநகர பெருமைகளில் ஒன்றாகிவிட்டது. சதகுருவின் தன்னார்வலர்களுக்கு வாழ்த்துக்கள்.

 • Paranthaman - kadappa,இந்தியா

  ஒரு நாட்டில் அதிகம் பேர்கள் கின்னஸ் விருத்களை பெற்றார்கள் எனில் அந்த நாட்டுக்கு பெருமை. அதற்குரிய விருது வழங்க கின்னஸ் நிர்வாகம் ஏதாவது திட்டம் வைத்துள்ளதா.

 • abdul rajak - trichy,இந்தியா

  யோக பாரம்பரியத்தில் சிவனை யோக முதல் யோகியாக குருவாக பார்க்கின்றனர்.//////// அப்படி பார்த்தல் ஆதாம் தான் முதல் மனிதர் , முதல் முஸ்லீம் (யோகி ), மற்றும் ஞானம் வழங்க பட்ட பொருட்கள் சார்ந்த விஞ்ஞானத்தின் மூலம் (குரு ) என குரான் சொல்கிறது . ஆதாம் அவர்களுக்கு மனைவியும் , ரெண்டு மகன்களும் இருந்துள்ளனர் . ////// ஆதாம் கதையும் , சிவன் கதையும் ஏறக்குறைய பொருந்தி போகிறது . சிவன் ,ஆதாம் வந்தது சிலோனில் உள்ள திரிகோண மலை என இந்துக்களும் , சில முஸ்லிம்களும் நம்புகின்றனர் .

 • Venkii - Chennai,இந்தியா

  கின்னஸ் ங்குறது சரக்கு விக்கிற கம்பெனி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement