Advertisement

சொல்கிறார்கள்

கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் ஆளி விதை..!

கொழுப்பு சத்தின் அவசியம் குறித்து கூறும், டயட்டீஷியன் ஷைனி சந்திரன்: ஆரோக்கியமான எடையுடன் ஒருவர் இருக்கிறாரா என்பதை அறிய உதவு கிறது, பி.எம்.ஐ., - 'பாடி மாஸ் இன்டக்ஸ்!' எடையை, இரட்டிப்பு ஆக்கப்பட்ட உங்களின் உயரத்தால் வகுத்தால் வரும். உதாரணமாக, உங்கள் எடை, 60 கிலோ, உயரம், 1.62 மீ., என்றால், 60/1.62x1.62 = 22.86.
பி.எம்.ஐ., 18.5க்கு குறைந்தவர்கள், மிகவும் எடை குறைந்தோர்; 18.5 - 24.9 எனில், சராசரி எடையுடையோர்; 25 - 29 இருப்போர், பருமனானவர்கள்; 30க்கும் அதிகமாக இருப்பவர்களை, மிகவும் பருமனானவர்கள் என்று கூறலாம்.
எடை குறைவாக இருப்பவர்கள், மிக வேகமாக, உடல் பருமனடைய வேண்டும் என்று நினைக்காமல், படிப்படியாக, ஆரோக்கியமான முறையில், உடலில் சதை போட முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியமற்ற, சத்தில்லாத, சக்கையான உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, மைதாவால் செய்யப்பட்ட, பரோட்டா, நுாடுல்ஸ், பிரெட்டுக்கு, 'நோ' சொல்லி விடுங்கள்.
இயற்கையான உணவுகள் மூலம், உங்கள் எடையை அதிகரிக்க முற்படும் போது, உங்கள் ஆரோக்கியமும் மேம்படும். ஒரு நாளைக்கு, இரண்டு முதல், மூன்று கப் பால் குடியுங்கள். தயிர், மோர், சீஸ் மற்றும் பனீர் என்று, எந்த வடிவத்தில் வேண்டுமானாலும், பால் சேர்த்து கொள்ளலாம்.
உணவில், கொழுப்பு சத்தும் அவசியம் வேண்டும். 'ஜீரோ பேட்' எனப்படும் கொழுப்பே இல்லாத உணவை, இன்றைய இளம் பெண்கள்
அதிகம் நாடுகின்றனர். ஆரோக்கியமான உடல் நலனுக்கு, கொழுப்புசத்து முக்கியம்.
ஒரு கிராம் கொழுப்பு சத்தில், 9 கிலோ கலோரி கிடைக்கிறது. வெப்பம், குளிர் போன்ற சீதோஷ்ண மாற்றங்களின் போது, நம் உடலை, பாதுகாப்பு கவசமாய் காப்பது கொழுப்பு சத்து தான். பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் வால்நட் போன்ற கொட்டை வகைகளில், நல்ல கொழுப்பு சத்துகள் உள்ளன.
கொட்டைகளில், ஒமேகா 3, பேட்டி ஆசிட் உள்ளதால், நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது. ஒரு நாளைக்கு, 5 - 10 பாதாம் அல்லது வால்நட் சாப்பிடுவது நல்லது. உப்பு சேர்த்து, வறுத்த கொட்டைகளை சாப்பிடாமல், வெறும் பருப்புகளை சாப்பிட வேண்டும்.
'ப்ளாக்ஸ் சீட்ஸ்' எனப்படும், ஆளி விதையிலும் ஒமேகா 3, பேட்டி ஆசிட் உள்ளது. இந்த விதைகளை பொடித்து, தினமும், நாம் சாப்பிடும், மோர், பழச்சாறு, ரசம், சட்னி, பழத்துண்டுகள் மற்றும் சாலட்டுடன், ஒன்றிரண்டு ஸ்பூன் போட்டு சாப்பிடலாம்; தண்ணீரில், ஒரு ஸ்பூன் சேர்த்து பருகலாம். உடம்பில், கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதில், ஆளி விதை பெரும் பங்கு வகிக்கிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement