Advertisement

பக்க வாத்தியம்

'பா.ஜ., சளைத்தது அல்ல...!'


---சமீபத்தில் மதுரைக்கு வந்தார், பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை. 'காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?' என, நிருபர் ஒருவர் கேள்வி எழுப்ப, ஆவேசப்பட்ட தமிழிசை, 'தி.மு.க., 18 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? 'எனக்கு அரிச்சுவடி தெரியாது' என, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார். அவரது பக்கத்து வீட்டில் நான் வளர்ந்தேன். 'தமிழ் தமிழ்' என, குரல் கொடுப்பவர்கள், மூணாறில் தமிழ் பெண்களை கேவலமாக பேசிய, கேரள
அமைச்சர் மாணியை விமர்சிக்காதது ஏன்? திராவிட கட்சிகளுக்கு, பா.ஜ., ஒன்றும் சளைத்தது அல்ல' என, அடுக்கியபடி சென்றார்.'இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை; போதும்டா சாமி...' என, நிருபர்கள் பேட்டியை முடித்து கிளம்பினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement