Advertisement

இயற்கை தரும் சிகிச்சை

ஜப்பானில், 'ஷின்ரின் யோகு' என்ற ஒரு சொலவடை உண்டு. இதற்கு, 'காட்டுச் சூழலை உள்வாங்குதல்' என்று பொருள். இது, நடைமுறையில் பலன் தருகிறதா என சோதிக்க, 280 பேரை, ஜப்பானின், 24 காட்டுப் பகுதியிலும், நகரங்களிலும் நடைபயிற்சி மேற்கொள்ளச் செய்தனர். இரு முறையும் அவர்களது உடல் நிலை மற்றும் மன நிலை குறித்த அளவீடுகளை எடுத்துக் கொண்டனர். இறுதியில், இயற்கை சூழ்ந்த பகுதியை ரசித்தபடி அவர்கள் இருந்தபோது ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு போன்றவை குறைவாக இருந்தன. மேலும், மனச் சுமையை ஏற்படுத்தும் கார்டிசால் சுரப்பும் குறைவாகவே இருந்தது. எனவே, இயற்கையை உள்வாங்குதல் உடலுக்கும், மனதுக்கும் நல்லது என்றே
ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement