Advertisement

.'சீஸ்' உணவு செய்யும் '3டி பிரின்டர்'

முப்பரிமாண அச்சு தொழில் நுட்பம் பல துறைகளில் புரட்சிகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில், உணவுத் துறையும் இத்தொழில் நுட்பத்தை அரவணைத்துக் கொண்டுள்ளது. அயர்லாந்திலுள்ள கார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 'சீஸ்' எனப்படும் பாலாடைக் கட்டிகளை வைத்து, முப்பரிமாண அச்சியந்திரத்தில் கரடி, முயல் போன்ற வடிவங்களை அச்சிடும் பரிசோதனையை செய்து பார்த்தனர். இதற்கென பிளாஸ்டிக்கை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கும் முப்பரிமாண அச்சியந்திரத்தையே பயன்படுத்தினர். ஆனால், பிளாஸ்டிக்கை உருக்கிப் பிழியும் உலோக முனைக்குப் பதிலாக, சீஸ் கட்டிகளை உருக்குவதற்கென சிறப்பு உலோக முனையை, ஆய்வாளர்கள் உருவாக்கி பயன்படுத்தினர்.இப்படி உருக்கி, பிழிந்து, பலவித உருவங்களில் அச்சிடப்பட்ட சீஸ் பண்டங்கள், மென்மையாகவும், சற்று நிறம் மங்கியும் தெரிந்தன. முப்பரிமாண அச்சின் மூலம் சீஸ், மூலக்கூறு அளவில் அடைந்த மாற்றங்களை கவனித்த ஆராய்ச்சியாளர்கள், இதை நுகர்வோருக்கு சாதகமாக எப்படி பயன்படுத்தலாம் என்று ஆராய்ந்து வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement