Advertisement

5 நிமிடத்தில் 'சார்ஜ்' ஆகும் கார் பேட்டரி

காருக்கு பெட்ரோல் போட ஆகும் அதே நேரத்திற்குள் மின்சார காரின் மின்கலனை மின்னேற்றம் செய்ய முடியுமா?
இது தான் மின்கலன் தொழில் நுட்பத்தின் முன் உள்ள சவால். அது சாத்தியமே என்கிறது, 'ஸ்டோர்டாட்!' இஸ்ரேலைச் சேர்ந்த ஸ்டோர்டாட், ஒரு மின்சார கார், 482 கி.மீ., துாரம் ஓடத் தேவையான மின்சாரத்தை, ஒரு மின்கலனில், ஐந்தே நிமிடத்தில் மின்னேற்றம் செய்து காட்டியிருக்கிறது.
அண்மையில், பெர்லினில் நடந்த கண்காட்சியில், 'பிளாஷ் பேட்டரி' என்ற அந்த மின்கலனை, உலகுக்கு ஸ்டோர்டாட் அறிமுகப்படுத்தியது. இந்த மறு மின்னேற்றம் செய்யக்கூடிய மின்கலனில் என்ன இருக்கிறது? நேனோ தொழில் நுட்பமும், ஸ்டோர்டாட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட, ரகசிய உயிரி வேதிப் பொருட்களின் கலவையால் செய்த மின் சேமிப்புத் தகடுகள் உள்ளன.பல மின் சேமிப்புத் தகடுகளை, ஒரு சிறு மின்கலன் பெட்டியாக்கியுள்ளனர். இது போன்ற, 40 மின்கலன் பெட்டிகளைக் கொண்ட தொகுப்பு, ஒரு சராசரி மின்சார காருக்கு போதுமானது என்கின்றனர் ஸ்டோர்டாட்டின் அதிகாரிகள். உலகெங்கும் மின்சார கார்களின் பயன்பாடு அதிகரித்து வரும் இத்தருணத்தில், இது நிச்சயம் நல்ல சேதி தான்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement