Advertisement

காற்று மாசை எரிபொருளாக்கலாம்!

காற்றின் மாசுபாட்டை குறைப்பதோடு, எரிபொருளாகப் பயன்படும் ஹைட்ரஜனையும் காற்றிலிருந்து பிரித்தெடுக்கும் ஒரு கருவி இருந்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் செய்திருக்கின்றனர், பெல்ஜியத்தைச் சேர்ந்த, லுவேன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள்.மிகச் சிறிய இந்தக் கருவியில், ஒரு புறம், 'டைட்டானியம் டையாக்சைடு' அடிப்படையிலான ஒளியைக் கொண்டு கிரியா ஊக்கியாகச் செயல்படும் தகடு உள்ளது. மறுபுறம், பிளாட்டினம் அடிப்படையிலான கிரியா ஊக்கி உள்ளது. இந்த இரண்டுக்கும் நடுவே ஒரு சவ்வு உள்ளது. டைட்டானியம் டையாக்சைடு பகுதியில் காற்றிலுள்ள கரிம மூலக்கூறுகளை சிதைத்து, காற்றை துாய்மைப்படுத்துகிறது. சவ்வின் வழியே கரிம மூலக்கூறுகள் மறுபுறமுள்ள பிளாட்டினம் பகுதிக்கு வரும்போது, அங்கே வேதி வினை நிகழ்ந்து ஹைட்ரஜன் வாயு உற்பத்தியாகிறது. இன்னும் பரிசோதனை நிலையிலுள்ள இந்த எளிய கருவிக்கு, நீரோ, மின்சாரமோ தேவைப்படாது என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய அம்சம். தொழிற்சாலைகளிலும், வீடுகளிலும் ஹைட்ரஜன் வாயுவை தயாரித்து, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க இதை பயன்படுத்த முடியுமா என, லுவேன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement