Advertisement

நோயறியும் தோல் பட்டை!

ஒருவரது தற்போதைய உடல் நலத்தை உடனுக்குடன் பிரதிபலிக்கும் தன்மை உள்ளது அவரது வியர்வை. அதில் உள்ள பல வேதிப் பொருட்கள் ரத்தத்திலிருந்து வருபவை. எனவே, நோயறிதலுக்கு வியர்வையை ஆராய்வது முக்கியம் என்ற முடிவுக்கு வந்துள்ளது மருத்துவ உலகம்.
அமெரிக்காவிலுள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தோலின் மீது சிறிய பட்டை போல ஒட்டிக் கொள்ளும் மின்னணு உணரிகளை உருவாக்கியுள்ளனர். இந்த உணரிகள், வியர்வையில் உள்ள வேதிப் பொருட்களை உணர்ந்தறிந்து, ஒரு மொபைல் செயலிக்கு தகவல்களை உடனுக்குடன் அனுப்பி விடுகின்றன. அந்த தகவல்களை வைத்து, அந்த பட்டையை அணிந்தவருக்கு சர்க்கரை, உப்பு சத்துக்கள் குறைவாக உள்ளதா, மிகையாக உள்ளதா, போதிய நீர் அருந்தி இருக்கிறாரா போன்ற தகவல்களை அந்த செயலி தெரிவிக்கும். மேலும், பல நோய்கள், தங்கள் இருப்பைத் தெரிவிக்கும் வேதிப் பொருட்களை ரத்தத்தில் கலக்கின்றன என்பதால், வியர்வையிலும் அவை தலைகாட்டும். எனவே, எதிர்காலத்தில் இந்தப் பட்டைகள், பல நோய்களை அறியவும் பயன்படும் என, நார்த்வெஸ்டர்ன் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement