Advertisement

சொல்கிறார்கள்

பராமரிப்பு மிக முக்கியம்!


'வெர்டிகல் கார்டன்' பற்றி கூறும், நெல்சன் எர்த்சென்ஸ் அக்ரோ புராடெக்ட்ஸ் நிறுவன இயக்குனர், செந்தில் பிரபு: மாடியில் தோட்டம் அமைக்கும் போது நீர்க்கசிவு ஏற்படும் என்ற பயம், பலருக்கும் இருக்கும். தற்போது மாடியில் ஏற்படும் நீர்க்கசிவை தவிர்க்க, வெர்டிகல் கார்டன் என்ற தொழில்நுட்பம், பிரபலமாகி வருகிறது.
இதில், ஓர் அடுக்கு என்பது, மூன்று தொட்டிகளை கொண்டதாக இருக்கும். இவற்றை தனியாகவும் சுவரில் மாட்டிக் கொள்ளலாம். மொத்தமாக, 50 அல்லது 100 அடுக்குகளை, வீட்டைச் சுற்றியுள்ள சுவரிலும், மாடியில் உள்ள சுற்றுச்சுவர்களிலும் அமைக்கலாம்.
மூன்று அடுக்குகள், ஒன்றின் கீழ் ஒன்றாக ஒரு வரிசையில் அடுக்கப்பட்டு இருக்கும். மேலே தண்ணீர் ஊற்றும்போது, முதல் தொட்டி நிரம்பி அடுத்த தொட்டிக்கு தண்ணீர் செல்லும் வகையில், தொட்டியில் துளை அமைக்கப்பட்டிருக்கும்.தண்ணீர் அதிகமாக இருந்தால், தொட்டி கீழ்ப்புறத்தில் உள்ள துளை வழியாக தண்ணீர் வெளியேறி, கீழே அமைந்துள்ள தொட்டிக்கு சென்றுவிடும். கடைசி அடுக்கில் உள்ள துளை வழியாக வெளியேறும் நீரை, மழை நீர் சேகரிப்பு குழாய் அமைப்பது போல தண்ணீரை வீணாக்காமல் சேகரித்து, மற்ற செடிகளுக்கும் பயன்படுத்தலாம்.
வெர்டிகல் கார்டனுக்கு, சொட்டு நீர் பாசன முறை சிறந்தது; எனினும், 10 அடுக்குக்கு குறைவாக இருந்தால், கைகளால் தண்ணீர் ஊற்றுவது நல்லது. இந்த கார்டனில் அதிக தொட்டிகள் கொண்ட சுவரை அமைக்கும் போது, விலை குறைவாக இருக்கும்.
இதுவரை பள்ளி, ரெஸ்டாரன்ட், வீடுகள் என, அனைத்து இடங்களிலும் அமைத்து தந்திருக்கிறோம். இப்போது அழகுக்காக, கண்ணைக் கவரும் வகையிலான செடிகள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. ஆனால், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, வெங்காயம், புதினா, கொத்தமல்லி, கீரை வகைகள், பந்தல் காய்கறிகள், கொடி வகை காய்கறிகள் ஆகியவற்றையும் வளர்க்கலாம்.
வீடு அழகாக இருக்க வேண்டும், வீடு முழுவதும் பசுமையாக இருக்க வேண்டும் என நினைப்போர் மட்டுமே, வெர்டிகல் கார்டனைப் பயன்படுத்தி வருகின்றனர். மாடியிலும், சுவரின் கைப்பிடிகளிலும் கூட, வெர்டிகல் கார்டனை அமைக்கலாம்.
பணம் செலவழித்து பெரிய சுவர் தோட்டத்தை அமைத்துவிட்டால் மட்டும் போதாது; பராமரிப்பு மிக முக்கியம். மாதம் ஒருமுறை செடிகளுக்கு இயற்கை உரங்களை இடுவது அவசியம்.
இந்த வெர்டிகல் கார்டனை அமைக்க, மொத்தமாக, சதுர அடிக்கு, 900 ரூபாய் வரை செலவாகும். இதில் சொட்டு நீர்க்குழாய்கள், வேலையாட்கள் என, முழுமையானத் தோட்டம் அமைத்து தந்து விடுவோம். சுவர்த்தோட்டம் அமைக்கும் பொருட்கள் மட்டும் தந்தால், சதுர அடிக்கு, 600 ரூபாய் வரை செலவாகும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement