Advertisement

பக்க வாத்தியம்

கள்ளுக்கு வரவேற்பு; பதனீருக்கு 'குட் பை!'

தென்னை, பனை மரத்தில் எடுக்கப்படும், 'நீரா' பானம் குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் நல்லசாமி, மதுரையில் பேட்டிஅளித்தார்.அவர் கூறுகையில், 'பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 'கள்ளுக்கு ஆதரவு தரும் நீங்கள், பதனீருக்கு ஆதரவு தரவில்லையே... கள்ளில் போதை இருப்பதால் தான், நீங்கள் கள்ளுக்கு ஆதரவு தருகிறீர்களா?' என கேட்டார். அதற்கு நான், 'பதனீரில் சுண்ணாம்பு கலக்கப்படுகிறது. உடலுக்கு சுண்ணாம்பு சத்து தேவை என்பதற்காக, சுண்ணாம்பை அப்படியே உண்ண முடியாது. கள்ளில் இருந்து சர்க்கரை தயாரித்தால், கிலோ, 500 ரூபாய்க்கு விலை போகும்; பதனீர் சர்க்கரை, கிலோ, 160 ரூபாய்க்கு விலை போகிறது. கள் சர்க்கரையால் விவசாயிகளுக்கு லாபம்; இதனாலேயே கள்ளுக்கு ஆதரவு தருகிறோம்' என்றேன். ராமதாஸ் ஏற்று கொண்டார்' என்றார்.'கள்ளுக்கு மவுசு குறைஞ்சிருக்கே... இப்போ இருக்குற நிலையில, கள்ளச் சாராயம் பெருகாம இருந்தா சரி...' என, நிருபர் ஒருவர் வேதனையுடன் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement