Advertisement

சொல்கிறார்கள்

பேக்கரி உணவுகள் வேண்டவே வேண்டாம்!பேலியோ டயட் குறித்து கூறும், நரம்பியல் நிபுணர், மரியானோ ஆன்டோ ப்ருனோ மஸ்கரணாஸ்: இளமை மாறாமல், பிட்னெசுடன் இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் விருப்பம். அதற்காக, 'பேலியோ டயட்' உணவுப் பழக்கத்துக்கு பலரும் மாறி
வருகின்றனர்.பேலியோ டயட்டுக்கு மாறுவதற்கு முன், கொழுப்பு, இரும்பு சத்து குறைபாடு, ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் தைராய்டு என, ஆறு வகையான பரிசோதனைகளை
செய்வது நல்லது.பேலியோ டயட்டை மேற்கொள்ளும்போது, ஆரம்பத்தில் தலைவலி, களைப்பு இருக்கும். நீர்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரையும் வழக்கத்தை விட அதிகமாகப் பருக வேண்டும். பேலியோ டயட்டில் இருப்பவர்கள், வயிறு நிறையச் சாப்பிட
வேண்டும்.மாதம் ஒரு நாள் மட்டும் அரிசி உணவு வகைகள், பழங்களை சாப்பிடலாம். 'ஜங்க்' புட்ஸ் மற்றும் இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும். தினசரி நடைப்பயிற்சி மட்டும் செய்தால் போதும். மூன்று வேளையும் வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
அசைவ உணவு சாப்பிடுவோர், காலை, மூன்று முட்டை ஆம்லெட் அல்லது முழு முட்டை கட்டாயமாக மஞ்சள் கருவும் சேர்த்துச் சாப்பிட வேண்டும். தேவைப்பட்டால், நான்கு முட்டைகளைக் கூட உண்ணலாம். நெய் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.
மதியம் - பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ் என, இதில் ஏதாவது ஒன்றை, 100 கிராம், நெய்யில் வதக்கியோ ஊற வைத்தோ உண்ணலாம். காலிபிளவர் ரைஸ் - காலிபிளவரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, இட்லி பாத்திரத்தில் ஸ்டீம் செய்து எடுத்து, அரிசி போல் சாப்பிடலாம். சிக்கன் அல்லது மட்டன் சூப் பருகலாம்.
இரவு - வேக வைத்த அல்லது கிரில் செய்த சிக்கன், மட்டன், மீன் சாப்பிடலாம். சிற்றுண்டி - தினமும் ஒரு கப் கொழுப்பு உள்ள பால் அல்லது 50 கிராம் கொழுப்பு உள்ள சீஸ்.
சைவ உணவு சாப்பிடுவோர் காலை - 100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ் அல்லது முந்திரி. மதியம் - காலிபிளவரை ரைஸ். காய்கறி சூப் ஏராளமாகப் பருகலாம். உடன் சிறிது தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
வாரத்தில் ஒரு நாள், 40 கிராம் கைக்குத்தல் அல்லது குதிரை வாலி அரிசி எடுத்துக் கொள்ளலாம். இரவு, 200 கிராம் பனீர். சிற்றுண்டி - ஒரு கப் முழுக் கொழுப்பு உள்ள பால் அல்லது தயிர். தினமும், 100 கிராம் கீரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காபி, டீ அருந்தக் கூடாது. எந்த வகைப் பழங்களும், பழச்சாறுகளும் உட்கொள்ளக் கூடாது. வெள்ளைச் சர்க்கரை, தேன், நாட்டுச் சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி, கரும்பு, மாத்திரைகள் என, எந்த வகையிலும் இனிப்பு எடுத்துக் கொள்ளக் கூடாது. பேக்கரி பொருட்களை தவிர்க்க வேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Iniyan - chennai,இந்தியா

    இந்த பேலியோ டயட் உடலுக்கு கேடு...

  • MaRan - chennai,இந்தியா

    youtube இல் அய்யா திரு மு ஆணை அப்பன் அவர்களின் இயற்கை உணவு வீடியோ வை பாருங்கள் இந்த paleo டயட் எல்லாம் இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை நுழைக்க தான்,, இந்தியாவில் வெளிநாட்டு பொருட்கள் நிறையவே கிடைக்கிறது அனால் இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி இல்லை,, எனவே இந்த டயட் போர்வையில் வர பார்க்கிறார்கள் மக்களே இளவட்ட கல் தூக்கிய நாம் சாதாரண தொப்பை குறைக்க முடியாதா தினசரி இறைச்சி உட்கொண்டால் ரத்த புற்றுநோய் வரும்,, இயற்கை நமக்கு கொடுத்த அரும் கொடைகளான பழம், காய்கள், கொட்டைவகைகள், கரும்பு, நாட்டுச்சக்கரை போன்றவற்றை உட்கொள்ள கூடாது என்கிறார்கள் ஜாக்கிரதை தினமும் ஒருமணிநேரம் வேகமாக நடங்கள், வெறும் சோற்றை தின்பதை விட கலவையாக (சாதம்-தினை, கேழ்வரகு-கம்பு, குதிரைவாலி-புழுங்கல் அரிசி, ) பணம்கற்கண்டு, இஞ்சி டி ,, நல்ல ஆற்று மீன்,, வீட்டில் உரை ஊற்றிய தயிறு,, சாபிடுங்கால்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement