Advertisement

டீ கடை பெஞ்ச்

முதல்வரை சி.பி.ஐ., அதிகாரி சந்தித்தது ஏன்?


''ஏட்டிக்கு போட்டியா செயல்படுறாங்க...'' என்றபடியே வந்தார் அந்தோணிசாமி.
''யாரு பா...'' என்றார் அன்வர் பாய்.
''தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவரா, ஜான்சி ராணி இருக்காங்க... இவங்க தலைமையில, 'வாட்ஸ் ஆப் குரூப்' ஒண்ணு இருக்குங்க...''இதுக்கு போட்டியா, 'மாநில மகளிர் அணி நிர்வாகிகள்'ன்னு முன்னாள் எம்.பி., அன்பரசின் மகள் சுமதி தரப்புல, புதுசா, 'வாட்ஸ் ஆப் குரூப்' ஒண்ணை ஆரம்பிச்சிருக்காங்க... இதுக்கு, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலர் நக்மாவின் முழு ஆசியும் இருக்குங்க...
''இப்படி ரெண்டு குழுக்கள் இருக்கிறதால, எந்த குழுவுக்கு, தகவல் அனுப்புறதுன்னு
தெரியாம, மகளிர் அணி நிர்வாகிகள் குழப்பத்துல இருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
''அஞ்சே மாசத்துல, பெண் அதிகாரியை மாத்திட்டாவ வே...'' என, அடுத்த விஷயத்திற்குள் நுழைந்தார் அண்ணாச்சி.''எங்க ஓய்...'' என்றார் குப்பண்ணா.''சிவகங்கை மாவட்ட, சமூக நல அலுவலரா, உமையாள்னு ஒரு பெண்மணியை, 2016 டிசம்பர்ல நியமிச்சாவ...
''இவங்க வந்ததுமே, தாலிக்கு தங்கம் திட்டத்துல, 3,௦௦௦ விண்ணப்பங்கள் தேங்கி கிடந்ததை பார்த்திருக்காங்க... எல்லாத்தையும் ஆய்வு செஞ்சு, விதிகளை மீறிய, 205 விண்ணப்பங்களை நிராகரிச்சுட்டாங்க வே...
''அதெல்லாம், மாவட்டத்துல இருக்கிற ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிபாரிசு செஞ்சது... இதனால, அவங்களுக்கு மூக்கு மேல கோவம் வந்துட்டு... உமையாளுக்கு நெருக்கடி கொடுத்து, விண்ணப்பங்களை ஏத்துக்க சொன்னாவ... ஆனா, அவங்க கண்டுக்கவே இல்லை...
''இதனால, சென்னை வரைக்கும், 'பிரஷர்' கொடுத்து, உமையாளை கன்னியாகுமரிக்கு துாக்கி அடிச்சுட்டாங்க வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.''சத்தமில்லாத சந்திப்பு, பல கேள்விகளை எழுப்பியிருக்கு பா...'' என கடைசி மேட்டரை பேச ஆரம்பித்தார் அன்வர் பாய்.''என்ன சந்திப்பு ஓய்...'' என்றார் குப்பண்ணா.''தமிழக அமைச்சர்கள் நிறைய பேர், லஞ்ச புகார்ல சிக்கியிருக்காங்க... சேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கின அமைச்சர்கள், அதிகாரிகள் பட்டியலை, தமிழக அரசுக்கு, வருமான வரித்துறை அனுப்பி வச்சிருக்கு பா...
''இந்த சூழல்ல, சில நாட்களுக்கு முன்ன, தலைமைச் செயலகத்துல, முதல்வர் பழனிசாமியை, சி.பி.ஐ., இயக்குனர் பார்த்து பேசியிருக்கார்...
இந்த சந்திப்பு பத்தி, அதிகாரபூர்வமா எந்த அறிவிப்பும் வெளியாகலை...''ஆனா, லஞ்ச அமைச்சர்கள், அதிகாரிகள் சம்பந்தமா தான், முதல்வரிடம் அவர் ஆலோசனை நடத்திட்டு போனதா, கோட்டை வட்டாரங்கள்ல சொல்றாங்க பா...'' என, முடித்தார் அன்வர் பாய். அரட்டை வேறு திசைக்கு திரும்பியது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  எப்படி ? திருடர் கூட்டத் தலைவனிடம் போய் உங்கள்மேல் உள்ள புகாருக்கு நடவடிக்கை எடுக்கவா இல்லை மீனம் மேஷம் ராகுகாலம் பார்த்து வரட்டுமா, இல்லைபைலையே ஒரேயடியாக தகனம் செய்து காரியங்கள் செய்துவிடலாமா என்று 'ஆலோசனை' கேட்டிருப்பாரா ?

 • chinnamanibalan - Thoothukudi,இந்தியா

  சமூக நலத்துறையில், நேர்மையான அதிகாரிகள் நிர்வாகத்தில் இருந்தால் கமிஷன்,கையூட்டை நம்பி வாழும் கட்சிக்காரர்கள் எப்படி பிழைப்பு நடத்துவது?

 • sam - Doha,கத்தார்

  லஞ்ச லாவண்யத்தை ஒழிப்பதற்காக உள்ள எல்ல அரசாங்க அமைப்புகள் எல்லாம், அரசியல் விளையாட்டு அமைப்புகளாக தான் மாறியுள்ளது

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  பழனிசாமி பேரே அதில் இருக்கே? என்ன செய்ய அவரை?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement