Load Image
Advertisement

காமராஜர் சாலையில் 'ஜாலி'ஹே ப்பி ஸ்டிரீட்:'களை' கட்டிய விளையாட்டுகள்; ஆட்டம் போட வைத்த கலைகள்

மதுரை:வாகன போக்குவரத்தில் திணறும் மதுரை காமராஜர் சாலையில், மாநகராட்சி நடத்திய
'ஹேப்பி ஸ்டிரீட்' நிகழ்ச்சியில் பொதுமக்கள் குடும்பத்துடன் பங்கேற்று குதுாகலமாய்
ஆட்டம், பாட்டம் என தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நாம் வசிக்கும் இடத்தில் உள்ள ரோட்டை கூட நாம் அன்னியமாய் பார்க்கும் நிலையில், அந்த ரோட்டில் ஒரு சில மணி நேரம் காலாற நடந்து, ஓடி, விளையாடி, பாடி நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வாய்ப்பு 'ேஹப்பி ஸ்டிரீட்' நிகழ்ச்சியில் கிடைக்கிறது.

வண்டியே வராது; வந்து விளையாடு என மாநகராட்சி விடுத்த அழைப்பில், மதுரை காமராஜர் சாலையில் நேற்று காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை பொதுமக்கள் பல விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நிகழ்ச்சியை களைகட்ட வைத்தனர்.குட்டீஸ்களை குஷிப்படுத்த கலர் பெயின்டிங், ஓவியம் வரைதல், கலர் விக் அணிதல் மற்றும் சைக்கிளிங், ஸ்கேட்டிங், ஜம்பிங் பால், ஸ்கிப்பிங், கூடைப்பந்து, இறகுபந்து, ரோப்புல்லிங், கேரம்போர்டு, வாலிபால், என பலவிளையாட்டுகளுடன் பாரம்பரிய விளையாட்டுகளும் நடந்தன.

டான்ஸ், யோகா, சிலம்பம், லைவ்பேண்ட், கேம்ேஷா, பிட்நெஸ் டான்ஸ் என விதவிதமான நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை, டெங்கு, பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு விழிப்புணர்வு, மழை நீர் சேகரிப்பு, இயற்கை உணவுகள் குறித்த அரங்குகள் இடம் பெற்றன. அரசு மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. காமராஜர் சாலையை பசுமையாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாநகராட்சியுடன் ஐ.சி.ஐ.சி., வங்கி, போத்தீஸ் மற்றும் 'எலிகென்ட் ஈவென்ஸ்' நிறுவனம் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தது.

மதுரை 'டாப் 10'



கமிஷனர் சந்தீப் நந்துாரி: மதுரை மாநகராட்சியில் 56 வார்டுகளில் திறந்த வெளி கழிப்பிடம் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 44 வார்டுகளிலும் இந்நிலை ஏற்படுத்தப்படும். தற்போது இந்திய அளவில் 500 நகரங்களில் நடந்த சர்வேயில் மதுரைக்கு 57 வது இடம் கிடைத்துள்ளது. இதற்கு முந்தைய நிலையில் இருந்து தற்போது தரம் உயர்ந்துள்ளது. அடுத்த ஆண்டு மதுரை 'டாப் 10ல்' வரவேண்டும். அதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை. ஜூன் 1 முதல் குப்பைகளை தரம்பிரித்து எடுக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும். தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் ஒரு துளி தண்ணீரை கூட வீணாக்க கூடாது. காமராஜர் சாலையில் மரங்களே இல்லை. இந்த ரோடு முழுவதும் மரங்கள் நடப்பட்டு பசுமையாக்கப்படும். அடுத்த மாதம் இதைவிடவும் சிறப்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்படும்.

நிகழ்ச்சி மகிழ்ச்சி



கலெக்டர் வீரராகவராவ்: மாநகராட்சி நடத்தும் இந்த நிகழ்ச்சி மக்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி தரக்கூடியது. இதில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்பது உற்சாகமாக உள்ளது. இதனோடு நடத்தப்படும் ரத்ததான முகாம் மற்றும் சுற்றுப்புறசூழலை பாதுகாக்கும் நிகழ்ச்சிகளிலும் மக்கள் அதிகம் பங்களிப்பு செய்ய வேண்டும்.

மக்கள் ஆர்வம் ஆச்சரியம்



இது போன்ற நிகழ்ச்சிகள் கேள்விப்பட்டிருந்தாலும், முதல்முறையாக நேரில் பார்க்கிறேன். மதுரையிலும் மக்கள் இவ்வளவு ஆர்வமாக காலையிலே வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. அனைத்து விளையாட்டுகளிலும் மக்கள் போட்டி போட்டு விளையாடுகிறார்கள். நான் இம்முறை என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பார்க்கும் ஒரு பார்வையாளராக தான் வந்தேன்.
ஹீனா, கீழவாசல்தெருவுக்கு பெருமை நாங்கள் வசிக்கும் இந்த பகுதியிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது பெருமையாக உள்ளது. மக்கள் விரும்பி வருகிறார்கள். அதற்கு ஏற்ப இன்னும் கூடுதலாக விளையாட்டுகள், பொழுது போக்கு அம்சங்களை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் மக்கள் அதில் ஈடுபாடு கொள்ள முடியும். பார்வையாளர்களாக இருப்பதால் உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியம் கிடைப்பதில்லை.

வனிதா, காமராஜர்சாலை

குடும்பமாக ஆஜர்



அண்ணாநகரில் கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சியில் தனியாக பங்கேற்றேன். இம்முறை எனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்து வந்துவிட்டேன். எல்லோரும் அவர்களுக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடக்க வேண்டும். இது மக்களை 'ரிலாக்ஸ்' ஆக வைத்திருக்க பெரிதும் உதவும்.
ரஞ்சனி, மாட்டுத்தாவணி

எதிர்பார்ப்பு அதிகம்



சகோதரிகளுடன் இங்கு வந்தேன். மேடை நிகழ்ச்சிகளில், எங்களது மகிழ்ச்சியை ஆரவாரமாக பகிர்ந்து கொண்டோம். நல்லதெரு பொழுது போக்கு நிகழ்ச்சியாகவும் அதே நேரத்தில் மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அடுத்த நிகழ்ச்சி எங்கே, எப்போது என மதுரை மக்களின் எதிர்பார்ப்புக்குரியதாக புதுமை நிகழ்ச்சியாக 'ேஹப்பி ஸ்டிரீட்' அமைந்துவிட்டது.

இலக்கியா, அண்ணாநகர்



வாசகர் கருத்து (4)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement