Advertisement

தேர்தல் பீதியில் எம்.ஜி.ஆர்., புகழ் பாடும் மந்திரிகள்

''எல்லாரையும் துட்டு கொடுத்து, கூட்டிட்டு போயிருக்காங்க பா...'' என, முதல் ஆளாக பேச்சை ஆரம்பித்தார் அன்வர் பாய்.''எந்த கூட்டத்துக்கு வே...'' என்றார் அண்ணாச்சி.
''தினகரன் கைதை கண்டிச்சு, சமீபத்துல, மதுரையில ஆர்ப்பாட்டம் நடந்துச்சு... சசிகலா தரப்புக்கு ரொம்பவும் வேண்டிய, கர்நாடக மாநில, அ.தி.மு.க., அமைப்பாளர் புகழேந்தி தலைமையில, இந்த ஆர்ப்பாட்டம் நடந்துச்சு பா...
''இதுக்கு வந்த கூட்டத்துல, நிறைய முதியவர்கள் தான் இருந்தாங்க... பெண்கள் சொற்பமா தான் இருந்தாங்க... இப்ப தான், மழை, தண்ணியில்லாம வறட்சி தாண்டவமாடிட்டு இருக்கே...
''இதனால, திண்டுக்கல், தேனி மாவட்டங்கள்ல வேலை இல்லாம இருந்த, ஏழை விவசாயிகளுக்கு பணம் கொடுத்து, கூட்டத்துக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க பா...'' என, முடித்தார் அன்வர் பாய்.
''ஆஸ்பத்திரியில இருந்து, நேரா அறிவாலயத்துக்கு வந்துட்டாருங்க...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்தார் அந்தோணிசாமி.
''யாரு ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''துாத்துக்குடி தெற்கு மாவட்ட, தி.மு.க., செயலர் பெரியசாமி உடம்பு சரியில்லாம, சென்னை தனியார் ஆஸ்பத்திரியில சேர்ந்து, சிகிச்சை எடுத்தாருங்க... 'டிஸ்சார்ஜ்' ஆனதும், கையில மாட்டியிருந்த குளுக்கோஸ் சிரிஞ்சோட, அறிவாலயத்துக்கு போயிட்டாருங்க...'' என, அந்தோணிசாமி முடிக்கும் முன்பே, ''அந்த அளவுக்கு கட்சி மேல பாசமா வே...'' என்றார் அண்ணாச்சி.
''அட முழுசா கேளுங்க... அறிவாலயத்துல ஸ்டாலினை பார்த்தவர், 'எனக்கு வயசாயிடுச்சு...
அதனால, என் மகன் ஜெகனுக்கு மாவட்ட செயலர் பதவியை கொடுங்க'ன்னு கடிதம் கொடுத்துட்டு போயிருக்காருங்க...
''ஆனா, கட்சியினர் மத்தியில, பெரியசாமி மகளான, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனுக்கு பதவியை கொடுக்கணும்னு சொல்றாங்க... இதுக்கு இடையில, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும், ஒன்றிய செயலர் ஒருத்தரும், மாவட்ட செயலர் பதவிக்கு முட்டி மோதுறாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
''எல்லாரும், எம்.ஜி.ஆர்., புகழ் பாடிண்டு இருக்கா ஓய்...'' என, கடைசி விஷயத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எங்க பா...'' என்றார் அன்வர் பாய்.
''ஜெயலலிதா இருந்தப்ப, எல்லா விழாக்கள்லயும், அவர் புகழை மட்டும் தான் அமைச்சர்கள் பேசுவா... சமீபத்துல, மதுரையில நடந்த ஒரு விழாவுல, அமைச்சர்கள் ராஜு, உதயகுமார் எல்லாம், ஜெயலலிதாவை விட, எம்.ஜி.ஆரையே அதிகமா புகழ்ந்து தள்ளினா ஓய்...
''ஏன்னா, 'இந்த அரசு எந்த நேரத்துலயும் கவிழ்ந்து, தேர்தல் வரலாம்னு பழனிசாமி தரப்புல நினைக்கறா... தேர்தல்ல, எம்.ஜி.ஆர்., பெயரை சொல்லி தான் ஓட்டு கேட்கணும்கறதால, இப்பவே, ஒத்திகை பார்த்துண்டு இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
அரட்டை அப்படியே, எம்.ஜி. ஆர்., கால அரசியல் பக்கம் திரும்பியது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement