Advertisement

பக்க வாத்தியம்

'பில்ட் அப்' பண்ண வேண்டாம்!

---ராமநாதபுரத்தில், மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டம் மற்றும் பார்லிமென்ட் தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பங்கேற்றார். பா.ஜ.,வை சேர்ந்த கருணாநிதி வீட்டில், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
நிருபர்களின் கேள்வி நேரம் முடிந்ததும், கருணாநிதி, 'யாரும் கேட்காத கேள்வியை நான் கேட்கிறேன்' என்றார். என்ன தான் கேட்கப் போகிறார் என, எல்லாரும் எதிர்பார்க்க, 'இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கு, ராமநாதபுரம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின் மயானம், சாஸ்திரப்படி அமையவில்லை.
மூளையில்லாத ஒரு இன்ஜினியர் அதை தவறாக அமைத்துள்ளார்' என, மிகைப்படுத்தி பேசினார். அப்போது குறுக்கிட்ட, இல.கணேசன், 'ரொம்ப, 'பில்ட் அப்' பண்ண வேண்டாம். அந்த இன்ஜினியருக்கு சாஸ்திரம் தெரியாமல் இருந்திருக்கலாம். சாஸ்திரத்தில் மின் மயானம் என்பது கிடையாது' எனக் கூறி, கருணாநிதியின் வாயை அடைத்தார். 'இதை ஒரு தேசிய பிரச்னையா பேசினவரை, என்ன செய்யிறது...' என நிருபர்கள், 'கமென்ட்' அடித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement