Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'இப்படி புலம்பிட்டு இருக்கிறதுக்கு பதிலா, அந்த நாட்டுக்கு எதிரா துணிச்சலா, நீங்களே நடவடிக்கை எடுக்கலாமே... நாடே உங்க பின்னாடி நின்னு கைதட்டி வாழ்த்துமே' என, சொல்ல தோன்றும் வகையில், மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர், நிதின் கட்கரி பேச்சு:
பயங்கரவாதத்தின் மையப்பகுதி, பாகிஸ்தானில், அரசு ஆதரவுடன் அமைந்துள்ளது. பயங்கரவாதம், மனித குலத்தை அச்சுறுத்தி, தெற்காசிய பகுதியின் அமைதியை சீர்குலைப்பதோடு, பொருளாதார வளர்ச்சியிலும் தடை ஏற்படுத்துகிறது. எனவே, அனைத்து சர்வதேச அமைப்புகளும், பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டியது அவசியம்.

தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு பேட்டி:
முதல்வர் பழனிசாமி, விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை எனக் கூறுவது தவறு. இயற்கை ஒத்துழைப்பு அளித்தால், டெல்டா மாவட்ட பாசனத்திற்காக, ஜூன் 12ல், மேட்டூர் அணை திறக்க வாய்ப்புள்ளது. மானாவாரி தொகுப்பு நிதியாக, 803 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிறு, குறு விவசாயிகளுக்கு, உரம் உள்ளிட்ட எல்லா பொருட்களும்
வழங்கப்படுகிறது.

பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த ராஜ்யசபா, எம்.பி., மைத்ரேயன் பேட்டி:
அ.தி.மு.க.,வின் இரு அணிகளை யும் இணைக்க, இரு தரப்பும், தலா ஏழு பேர் கொண்ட குழுக்களை அமைத்தன. ஆனால், இதுவரை எந்த பேச்சும் நடத்தப்படவில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, கட்சி ராணுவ கட்டுப்பாட்டுடன் இருந்தது. தற்போது, பழனிசாமி அணியில் உள்ள ஒவ்வொருவரும் மனம்போன போக்கில் செயல்படுகின்றனர். அந்த ஆட்சி, பாரம் தாங்காமல் விரைவில் கவிழ்ந்து விடும். அடுத்து வரும் தேர்தலில், பன்னீர்செல்வம் தலைமை யில் ஆட்சி மலரும்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு:
பா.ஜ., ஒரு கணக்கு கேட்கிறது. அதாவது, திராவிடன், தமிழன் எனக் கூறி, ஆட்சிக்கு வந்து, ஐந்து முறை முதல்வர் பதவியில், கருணாநிதி இருந்துள்ளார். அந்த காலத்தில், எத்தனை அணைகள் கட்டப்பட்டன. விவசாயம், கல்வி உள்ளிட்ட அரசு துறைகள் மூலம் செய்யப்பட்ட பணிகளின் விபரங்களை ஒப்படைக்க வேண்டும்.

தமிழக சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன் பேச்சு: அ.தி.மு.க., இரு அணிகளில், சிறு சேதாரம் ஏற்பட்டாலும் பாதிப்பு எங்களுக்கு தான். அது, வேறு ஒருவருக்கு லாபத்தை தந்து விடக்கூடாது. ஒரு குடும்பத்தில், சகோதரர்களுக்கு இடையே மன வேறுபாடு இருக்கும். விரைவில் ஒன்று கூடுவோம். இரு அணிகளிலும் மூத்த தலைவர்கள் குழு அமைத்துள்ளனர். இரண்டாம் கட்ட தலைவர்கள் பேசாமல் இருந்தாலே, பேச்சு நல்லபடியாக நடக்கும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement