Advertisement

தி.மு.க.,வுக்கு வந்த மாற்று கட்சியினர் விரக்தி!

''இப்படியே போயிட்டு இருந்தா, இதுக்கு ஒரு முடிவே கிடையாதா...'' என, நொந்தபடியே
பெஞ்சுக்கு வந்தார் அன்வர் பாய்.

''என்னாச்சு வே...'' என்றார் அண்ணாச்சி.

''திருவாரூர் மாவட்ட வேளாண் துறையில, ஒரு அதிகாரி இருக்காரு பா... தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அ.தி.மு.க.,வின் தீவிர அனுதாபி... 2015ல, 'ரிடையர்' ஆனாலும், அப்ப வேளாண் துறை அமைச்சரா இருந்த, வைத்திலிங்கத்தை பிடிச்சு, ஒரு வருஷம் பதவி நீட்டிப்பு
வாங்கிட்டாரு பா...

''இந்த பதவி நீட்டிப்பு, போன மாசமே முடிஞ்சிடுச்சு... டெல்டா மாவட்டமான திருவாரூர்ல விதை, பூச்சி மருந்து கம்பெனிகளிடம், 'கட்டிங்' வாங்கி சுகம் கண்டவர், அதை இழக்க விரும்பலை... திவாகரன் சிபாரிசுல, வேளாண் துறை தலைமையைப் பார்த்து, மறுபடியும் ஒரு வருஷம் பதவி நீட்டிப்பு வாங்கிட்டாரு பா...'' என, முடித்தார் அன்வர் பாய்.

''அங்க போறது, தமிழாசிரியர் மகிழ்வாகனன் தானேங்க...'' என, அந்தோணிசாமி கேட்க, அண்ணாச்சி கையை நெற்றி யில் வைத்து பார்த்து, ''ஆமா வே...'' என, உறுதிப்படுத்தினார்.
சில வினாடிகளுக்குப் பின், ''வாஸ்துக்காக, நினைவு துாணை இடம் மாத்துறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''எங்க ஓய்...'' என்றார் குப்பண்ணா.


''தர்மபுரி, எஸ்.பி., ஆபீசுக்கு போக, பக்கத்துல இருக்கிற மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆபீஸ் வழியா ரோடு இருக்குங்க... எல்லாரும் இந்த வழியா தான், எஸ்.பி., ஆபீசுக்கு போய் வந்துட்டு இருந்தாங்க...''போன வருஷம், எஸ்.பி.,யா பண்டி கங்காதர் வந்ததும், ஆபீஸ் நுழைவு வாயிலுக்கு நேரா, சுற்றுச்சுவரை உடைச்சு, எதிர்ல இருந்த மைதானம் வழியா, மண் சாலை போட்டாருங்க...

''இப்ப, இந்த சாலைக்கு பக்கத்துல இருந்த காவலர் நினைவு துாணை அகற்றி, மைதானத்தின் வேற பகுதியில அமைக்க இருக்காங்க... 'இதுக்கு, வாஸ்து தான் காரணம்'னு போலீசார் மத்தியில தகவல் பரவிடுச்சுங்க...

''எஸ்.பி.,யோ, 'பொதுமக்கள் சிரமம் இல்லாம வந்துட்டு போகவும், மாசா மாசம் நடக்குற ஆய்வுக்கு, போலீஸ் பஸ், லாரிகள் சுலபமா வந்துட்டு போகவும் வசதியா தான், நினைவு துாணை மாத்துறோம்'னு சொல்றாருங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.

''அரசனை நம்பி, புருஷனை கைவிட்ட கதையா போயிடுத்தேன்னு புலம்பறா ஓய்...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் குப்பண்ணா.

''யாருவே...'' என்றார் அண்ணாச்சி.

''சட்டசபை தேர்தலுக்கு முன்ன, ம.தி.மு.க., - தே.தி.மு.க., கட்சிகள்ல இருந்து, 15க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலர்கள், ஒன்றிய நிர்வாகிகள், ஸ்டாலின் முன்னிலையில, தி.மு.க.,வுல சேர்ந்தால்லியோ...

''இதுல, தே.மு.தி.க., 'மாஜி' எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டும், கட்சியில பொறுப்பு கொடுத்தா... தேர்தல்ல ஜெயிக்க முடியாம, எதிர்க்கட்சி வரிசைக்கு, தி.மு.க., போயிட்டதால, மத்தவாளை அம்போன்னு விட்டுட்டா...

''இதனால, அவா எல்லாம், 'பேசாம, தாய் கட்சியிலயே இருந்திருக்கலாமோ...'ன்னு இப்ப புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.''அங்க இருந்தா மட்டும், அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமா ஆகியிருப்பாங்களாக்கும்...'' என்ற அண்ணாச்சியின், 'கமென்டை' கேட்டு, பெஞ்சில் சிரிப்பலை பரவியது.

மின் வாரியத்தில் மர சாமான்கள் வாங்கியதில் முறைகேடு

''தீவிர வசூல் வேட்டையில இறங்கிட்டாங்க...'' என, முதல் தகவலை பேச ஆரம்பித்தார்
அந்தோணிசாமி.''இந்த அரசாங்கத்துல, அது ஒண்ணு தான் உருப்படியா நடக்கறது... விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''தமிழகத்துல, சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு ஆள் எடுக்குறாங்க... மாவட்ட கலெக்டர் தான் நியமனங்களை செய்வார்... அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் சிபாரிசுல தான், பணியிடங்களை நிரப்புவாங்க...

''இதுக்காக,3 லட்சம் ரூபாய் வரை, ஆளுங்கட்சியினர் பேரம் பேசுறாங்க... சமையலர், உதவியாளர் பணிக்கு, 50 ஆயிரத்துல இருந்து, ஒரு லட்சம் ரூபாய் வரை வசூல் பண்றாங்க...
''இதுல, மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் அமைச்சர், 'என் தொகுதியில, என் பரிந்துரை இல்லாம, யாரையும் நியமிக்க கூடாது'ன்னு, தன் மாவட்ட சீனியர் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும், 'கண்டிஷன்' போட்டிருக்காங்க... 'கட்சிக்காரங்களா இருந்தாலும், 'டிஸ்கவுன்ட்' எதுவும் கிடையாது'ன்னும் கறாரா சொல்லிட்டாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
''வளர்மதி வீட்டுல, பார்சலை கொடுத்துட்டு, எனக்கு பேசு டே...'' என, போனை, 'கட்' செய்தபடியே வந்த அண்ணாச்சி, ''கல்வி துறைக்கு புத்துயிர் கிடைச்சதா, புல்லரிச்சு போயிட்டாவ வே...'' என்றார்.

''யாரு பா அது...'' என்றார் அன்வர் பாய்.

''மெட்ரிக் பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம் வாங்கணும்னா, முன்னாடி, சென்னையில இருக்கிற இயக்குனர் ஆபீசுக்கு நடையா நடக்கணும் வே...

''சமீபத்துல, மதுரையில அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சியில, ஆறு மாவட்டங்கள்ல, 223 பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார உத்தரவுகளை, ஒரே நாள்ல கொடுத்துட்டாவ வே...''முதல் நாள் ராத்திரி தான், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளுக்கு போன் பண்ணி, 'நாளைக்கு வந்து, அமைச்சரிடம், உத்தரவுகளை வாங்கிட்டு போங்க'ன்னு சொல்லிஇருக்காவ...
''இதன் பின்னணியில, கல்வி துறையின் புதிய செயலர் உதயசந்திரன் இருக்கார்... அவர் தான், அமைச்சருக்கு இந்த ஆலோசனையை கொடுத்ததா சொல்லுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''உளுத்து போன சாமான்களா வாங்கி, பணத்தை சுருட்டிட்டாங்க பா...'' என, கடைசி மேட்டரை கையில் எடுத்தார் அன்வர் பாய்.

''எங்க ஓய் இந்த அநியாயம்...'' என, குமுறினார் குப்பண்ணா.

''சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்துல, ஊழியர்கள் பயன்படுத்துற மேஜை, நாற்காலிகள் எல்லாம் ரொம்ப பழசாகிடுச்சு... அதுக்கு பதிலா, சமீபத்துல, புதிய மரச்சாமான்களை வாங்கி போட்டிருக்காங்க பா...

''ஆனா, எல்லாத்தையும், தரமில்லாத மரத்துல செஞ்சிருக்காங்க... எல்லாம் உளுத்து போய், கரப்பான் பூச்சிகளின் புகலிடமா இருக்கு... இந்த கரப்பான் பூச்சிகள், ஊழியர்கள் சாப்பாட்டுலயும விழுந்துடுது பா...''இதனால, எல்லாரும் புது மேஜை, நாற்காலிகளை ஓரம் கட்டிட்டு, 'ஓல்டு இஸ் கோல்டு'னு பழசையே பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க பா... 'மரச்சாமான்கள் வாங்குனதுல, பெரிய தொகையை, சிலர் தேத்திட்டாங்க'ன்னு வாரிய வட்டாரங்கள்ல பேசிக்கிறாங்க பா...'' என, முடித்தார் அன்வர் பாய்.

பெரியவர்கள் நடையைக் கட்டினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement