Advertisement

சொல்கிறார்கள்

சேட்டையில் திணற வைத்தனர்!


விழுப்புரம் மாவட்டம், கந்தாடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யின், மூன்றாம் வகுப்பு
ஆசிரியை, அன்னபூர்ணா: என் அப்பா, டாக்டர். கடைசி வரை ஏழைகளுக்கு, 'ப்ரீ சர்வீஸ்' கொடுத்தார். அப்பா மாதிரியே நானும் டாக்டராக ஆசைப்பட்டேன். ஆனால், 0.5 கட் - ஆப் மார்க் குறைவால், முடியாமல் போனது. அப்பா சொன்னதைக் கேட்டு, பி.பி.ஏ., படித்து வந்த சமயத்தில், அரசு பள்ளி வேலை கிடைத்தது.
கடந்த, 2004ல், ஒன்றாம் வகுப்பு ஆசிரியையாக, இப்பள்ளியில் சேர்ந்த நாளிலேயே, அதிர்ச்சி அடைந்தேன். தையல் பிரிந்த சட்டை, மூக்கில் ஒழுகும் சளி என, இருந்த பிள்ளைகள், சேட்டையில் என்னை திணற வைத்தனர்.
மறுநாள், 'ஸ்கூலுக்கு போக மாட்டேன்' என, அப்பா, அம்மாவிடம் சண்டை, அழுகை, பிடிவாதம் செய்தேன். 'புனிதமான ஆசிரியர் பணியை உன் செய்கையால் அவமதிக்காதே' என சமாதானப்படுத்த, வேண்டா வெறுப்பாக பள்ளி செல்ல
ஆரம்பித்தேன்.
பிள்ளைகளுக்கு கற்று கொடுப்பதற்காகவே முறையான ஆங்கிலம் கற்றேன். நாள் முழுக்க வகுப்பறையில் பிள்ளைகளிடம் ஆங்கிலத்தில் தான் பேசுவேன். என் பிள்ளைகள் சிறப்பாக ஆங்கிலம் பேசுவதைப் பார்த்து, சில நல்ல உள்ளங்கள், வகுப்புக்கு
சின்னச் சின்ன நிதி உதவி செய்தனர். அப்போது தான், 'யார் யாரோ செய்யும் போது, நாம் ஏன் செய்யக் கூடாது...' என தோன்றியது.
வகுப்பறையில் படிக்க டேபிள், சேர் செட். அடுத்து, தனியார் பள்ளிகள் மாதிரி ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைக்க நான்கு டேப்லெட், ஸ்மார்ட் போர்டு, அபாகஸ் வாங்கினேன். இந்த செலவுகளுக்காக, என் நகைகளை விற்க வேண்டி இருந்தது.
இந்த மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுத்தால், அந்த குடும்பங்களின் அடுத்தடுத்த தலைமுறைகள் முன்னேறி விடுமே என, நினைத்த போது, நான் செய்தது பெரிய விஷயமாக தெரியவில்லை. ஒவ்வொரு ஆங்கிலப் பாடத்தையும், நாடக வடிவில் தான், சொல்லிக் கொடுக்கிறேன்.
ஆங்கிலத்தில் எழுத்துக்களை மனப்பாடமாக சொல்லி கொடுப்பதை விட, அந்த எழுத்துக்களின் ஒலி அடிப்படையிலும், வார்த்தைகளை, தாய்மொழியில் எழுதி பயன்படுத்தியும் சொல்லிக் கொடுத்தால், பிழையில்லாமல் பிரமாதமாக ஆங்கிலம் பேசலாம்.
அதனால், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கான ஆங்கிலப் பாடப் புத்தகங்களில் உள்ள வார்த்தைகளை, ஒன்றரை ஆண்டு உழைப்பில், 8,000 ஸ்லைடுகளாக, 75 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரித்தேன்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் பிரிட்டிஷ் இங்கிலீஷ் உச்சரிப்பு, தமிழ் அர்த்தம், புகைப்படம் என, உருவாக்கிய அந்த, 'சிடி'யை, பிள்ளைகளே, 'ஆப்பரேட்' செய்து, தினமும், 10 புது வார்த்தைகளை கற்றுக் கொள்கின்றனர். தவிர, மற்ற பள்ளி மாணவர்களுக்கும் இதை
கொடுக்கிறோம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement