Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

வி.சி., தலைவர் திருமாவளவன் பேட்டி: ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சி அமைக்க வேண்டும் என, பா.ஜ., கருது கிறது. மதவாத அரசியல் எனும் அபாயத்திலிருந்து தமிழகத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையே பாதுகாக்க வேண்டும். 'சட்டசபை தேர்தல் விரைவில் வரும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறி இருப்பதன் மூலம், பா.ஜ.,வின் திட்டம் அவருக்கு தெரிந்திருக்குமோ என, எண்ணத் தோன்றுகிறது.அ.தி.மு.க.,வின், 'மவுத் பீஸ்' போல, மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி:
கமிஷன் கேட்பதால், தமிழகத்திற்கு வர வேண்டிய திட்டம், வேறு மாநிலத்துக்கு செல்வதாக இப்போது, தி.மு.க., குற்றம் சாட்டுகிறது. இது போன்ற சூழ்நிலையை உருவாக்கியதே, தி.மு.க., தான். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள உறுதியற்ற நிலைக்கும், பா.ஜ.,வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஓராண்டாக உறுதியற்ற நிலை இருந்தும், ஒரு, அ.தி.மு.க., உறுப்பினர் கூட, தி.மு.க.,வுக்கு செல்லவில்லை.த.மா.கா., மாநில நிர்வாகி யுவராஜா பேச்சு:
தமிழகத்தில் தேர்தல் நடக்காததால், உள்ளாட்சி நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. முன்னாள் முதல்வரின் எஸ்டேட் வளாகத்திலேயே கொலை, கொள்ளை நடக்கும் அளவுக்கு, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சசிகலா மற்றும் குடும்பத்தினர், ஜெ., சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். அதைத் தடுக்கும் வகையில், ஜெ., சொத்துக்களை அரசுடைமையாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை:
பணி நியமனம் முதல், பணி மாறுதல் வரை அனைத்திலும் ஊழல் என்பது, அ.தி.மு.க., ஆட்சியின் அவலமாக உள்ளது. ஒப்பந்தப் புள்ளிகளாக இருந்தால் சதவீதம், பணி நியமனங்கள், பணி மாறுதல்களாக இருந்தால் இவ்வளவு பணம் என, விதவிதமாக அளவுகோல் வைத்து அலங்கோல ஆட்சியை, அ.தி.மு.க., நடத்திக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. ஓட்டளித்த மக்களை வஞ்சிக்கும் இப்படியொரு ஆட்சியை, இதுவரை தமிழகம் கண்டதில்லை.'உங்க அணிக்காரங்க யாரும் இப்படி யோசிக்கிறா மாதிரியே தெரியலயே... பிள்ளையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டிக்கிட்டே இருக்காங்களே...' என, சொல்லத் தோன்றும் வகையில், சசிகலா அணி, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை பேட்டி:
அ.தி.மு.க., ஒன்றுபட்ட இயக்கம் தான். கருத்து வேறுபாடுகளால், சில பிரச்னைகள் இருக்கின்றன. அதற்கு தீர்வு காண, அனைவரும் முயற்சி செய்து வருகிறோம். எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், பழனிசாமி, பன்னீர்செல்வம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.


'யாரு பிரச்னைல மாட்டிக்குவாங்க...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி:
அ.தி.மு.க., இரு அணிகளுக்கு இடையே, பேச்சு நடக்காமல் இருப்பதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ, அவற்றை எல்லாம், காழ்ப்புணர்ச்சியில் அமைச்சர் ஜெயகுமார் செய்கிறார். இரு அணிகளும் இணைந்தால், பிரச்னைகளில் மாட்டிக் கொள்வர் என்பதற்காக, பேச்சு நடத்தாமல் உள்ளனர்.


தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி:
தமிழகத்தில், ஊழல் அதிகமாக இருக்கிறது. இது, ஒவ்வொரு நாளும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, மனிதாபிமான அடிப்படையில் பல பதவிகள் அறிவிக்கப்பட்டன. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, தற்போது அந்த பதவிகள் அனைத்தும் விற்பனைக்கு வந்துள்ளன.


அகில இந்திய மகிளா காங்., பொதுச்செயலர் நக்மா பேட்டி:
குஷ்பு, காங்கிரசின் செய்தி தொடர்பாளர். அதனால், அவரின் பணி சற்று குறைவு. தொலைக்காட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்கிறார். அதனால், அவர் கட்சிப் பணியைக் கவனிக்காதது போலவும், நான் கட்சியில் பணியாற்றுவது போலவும் தெரிகிறது. உண்மையில், அவரவர் பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறோம்.


தமிழக, காங்., தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி:
அ.தி.மு.க.,வில் யாரை முதல்வராக்க வேண்டும் என, மோடி நினைக்கிறாரோ, அவரை முதல்வராக்க, பா.ஜ.,வினர் துடித்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் தான், ஒரு பிரிவுக்கு ஆதரவு, இன்னொரு குழுவிற்கு ஆதரவு, பின் ஒன்று சேர்ப்பு என, ஒவ்வொரு வேலையாகச் செய்து கொண்டிருக்கின்றனர். அதில் சிக்கி, அ.தி.மு.க.,வின் இரு பிரிவினரும், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, 'கிச்சு முச்சு' பேச்சு: சிறு வயதில் நான், ஐ.பி.எஸ்., அதிகாரியாக வேண்டும் என, கனவு கண்டேன். இந்த நாட்டை ஆளப்போகும் கேப்டனை திருமணம் செய்து கொண்டதால், என் கனவு பலிக்கவில்லை. ரமணா படத்தைப் பார்த்துவிட்டு, மலேஷிய லஞ்ச ஒழிப்பு அதிகாரி ஒருவர், 'தன், 'ரோல் மாடல்' கேப்டன் தான்' என, கூறியிருக்கிறார். கேப்டன் ஆட்சி தமிழகத்திற்கு வரும்போது, காவல் துறையை மக்கள் சேவகனாக மாற்றிடுவார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Sekar - MM Nagar

    அண்ணி பிரேமலதாவுக்கு என்னாச்சு? ஏன் இப்படியெல்லாம் பினாத்துறாரு? ஓ ...அக்னி அட்டாக்கா. சரி... சரி கையில எப்பவும் எலுமிச்சம்பழம் வெச்சுக்கச் சொல்லுங்க. அட அப்பப்ப juice போட்டு சாப்பிடதாம்ப்பா.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement