Advertisement

டீ கடை பெஞ்ச்

விஷால் மீது சினிமா சங்க நிர்வாகிகள் கடுப்பு


''கண்ணீர் மல்க, பெருமாளை வேண்டிட்டு வந்திருக்காரு வே...'' என, மசால் வடையை கடித்தபடியே, மேட்டரை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாரு பா...'' என்றார் அன்வர் பாய்.
''முதல்வர் பழனிசாமி, திடீர் பயணமா, சமீபத்துல, குடும்பத்தோட திருப்பதி போனார்... சென்னையில கிளம்பும் போது, வாட்டமான முகத்தோட தான் இருந்தார்... கார்ல திருமலைக்கு போய், ராத்திரி தங்கினாரு வே...
''மறுநாள் காலையில, கோவில்ல சிறப்பு தரிசனம் செஞ்சார்... பெருமாளுக்கு ஆரத்தி காட்டினப்ப, பழனிசாமி கண்ணீர் சிந்தியிருக்கார்... வெளியில வரும் போது, கண்களை துடைச்சுட்டே வந்திருக்காரு வே...'' என்றார்
அண்ணாச்சி.
''பன்னீர் அணியால, பதவிக்கு பங்கம் வந்துடக் கூடாதுன்னு வேண்டியிருப்பார் ஓய்...'' என்ற குப்பண்ணா, ''கப்பம் நின்னுடுத்தேன்னு கையை பிசைஞ்சுண்டு இருக்கா...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்தார்.
''யாரை சொல்றீங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்துல இருந்து, மானாமதுரை பக்கம் இருக்கிற பார்த்திபனுார் மதகு அணை வரைக்கும், ராத்திரி நேரங்கள்ல, திருட்டுத்தனமா சிலர் மணல் அள்ளிண்டு இருந்தா... அந்தந்த ஏரியா போலீசாருக்கு, 'கப்பம்' கட்டி, ஜோரா மணல் கடத்திண்டும் இருந்தா ஓய்...
''மானாமதுரைக்கு புதுசா வந்த, டி.எஸ்.பி., சங்கர், 'மணல் கடத்தல் கும்பலை கூப்பிட்டு, 'இனிமே யாரும் மணல் கடத்தல் பண்ணக்கூடாது... மீறினா, துாக்கி உள்ளே போட்டுடுவேன்'னு எச்சரிக்கை விடுத்திருக்கார் ஓய்...
''அவாளும் மிரண்டு போய், மணல்
கடத்தலை நிறுத்திண்டுட்டா... இதுல, போலீசாருக்கு கிடைச்சுட்டு இருந்த, 'வரும்படி' நின்னு போயிட்டதால, அவாள்லாம் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''அது சரி... டி.எஸ்.பி., முதல்ல, போலீசாருக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கணும் பா...'' என்ற அன்வர் பாய், ''விஷால் மேல கடுப்புல இருக்காங்க...'' என, கடைசி
விஷயத்திற்கு வந்தார்.
''அவரால என்ன பிரச்னைங்க...'' என்றார் அந்தோணிசாமி.''சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவரா,
சமீபத்துல நடிகர் விஷால் தேர்வாகி இருக்காருல்ல... சினிமா, 'டிவி' சீரியல் தயாரிப்பாளர், 'கில்டு'ன்னு இன்னொரு சங்கமும் இருக்கு பா...''டிவி'ல, 'சினிமா கிளிப்பிங்க்ஸ், பாடல் காட்சிகளை ஒளிபரப்ப, தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயிச்ச தொகையை கொடுத்தா தான், காட்சிகளை கொடுக்கணும்'னு விஷால் புது
நிபந்தனையை விதிச்சிருக்காரு பா...''ஆனா, சில
தயாரிப்பாளர்கள், 'கில்டு சங்கத்துலயும் நாங்க இருக்கிறதால, அந்த சங்க நிர்வாகிகள், சேனல்களிடம் பேசி கூடுதல் பணம் வாங்கி தர்றோம்னு சொல்றாங்க... நாங்க யார் பேச்சை கேட்கிறது'ன்னு புலம்பிஇருக்காங்க பா...
''உடனே விஷால், 'கில்டு' செயலர் ஜாக்குவார் தங்கத்தை கூப்பிட்டு, 'இந்த விவகாரம் தொடர்பா, இனி சேனல்களிடம் நீங்க பேச வேண்டாம்... நாங்க பார்த்துக்கிறோம்'னு
கண்டிப்பா சொல்லிட்டார்... ''இதனால, 'கில்டு' நிர்வாகிகள், அவர் மேல எரிச்சல்ல இருக்காங்க பா...'' என, முடித்தார்
அன்வர் பாய். பெஞ்ச் அமைதியானது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement