Advertisement

பக்க வாத்தியம்

அம்மா' புகழ் நேர்த்திக் கடன்!



மதுரையில், தொழிலாளர் நலத்துறை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அமைச்சர்கள் நிலோபர் கபில், ராஜு, உதயகுமார், துறை செயலர் அமுதா, கமிஷனர் பாலச்சந்திரன், அதிகாரிகள் பங்கேற்றனர்.ராஜு பேசும் போது, 'கட்டுமானத் தொழிலாளர், பணியின் போது இறந்தால், ௫ லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கலாம் என, ஜெயலலிதா அரசு எண்ணப்படி, செயலர் அமுதா வழங்க உத்தரவிட்டார்' என்றார்.அமைச்சர் உதயகுமார், 'ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட செயலர் அமுதா, பண்ணாரி அம்மன் கோவில் விழாவில், தீ மிதித்து, நம் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் பறை சாற்றினார்' என்றார்.'அ.தி.மு.க., அமைச்சர்களுக்கு ஏதாவது ஒரு, 'அம்மா' புகழை பாடணும்னு நேர்த்திக்கடன் போல...' என, நிருபர் ஒருவர் முணுமுணுக்க, சக நிருபர்கள்
சத்தமின்றி சிரித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement