Advertisement

சொல்கிறார்கள்

தலைதெறிக்க ஓடிவிடும்!


வெயில் காலத்தில் வரும் அக்கி நோய் குறித்து கூறும், இயற்கை நல மருத்துவர், ஒய்.தீபா: வெயில் காலத்தில் பெரும்பாலானோரை அவதிப்படச் செய்வது அக்கி. 'வெரிசெலா ஜோஸ்டர்' என்ற வைரஸ் தான், இதை பரப்புகிறது.அம்மை வந்து போனவர்களுக்கு பெரும்பாலும், அக்கி வரும். ஆனால், இது வந்தவுடன் அம்மை வரும் என்று சொல்ல முடியாது. தோலில் சிவப்பு திட்டுகளாக, வலியும், எரிச்சலும் ஏற்பட்டு, நீர்க்கட்டி போல் இருக்கும். முகம், கழுத்து, கால் விரல்களுக்கு இடையில் வரக்கூடும்.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது, அதிக ஸ்டிரெஸ், அதிக நேரம் வியர்வையுடன் இருந்து, அதனால் பூஞ்சை தொற்று ஏற்பட்டாலும், அது அக்கியாக மாறும்.இதற்கு, மஞ்சள், வேப்பிலையை அரைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் போடலாம். மஞ்சள், தேன், எலுமிச்சை, பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கூழாக்கி, பாதிக்கப்பட்ட இடங்களில் போட்டு, 30 நிமிடங்களுக்கு பின் தண்ணீரில் கழுவலாம். தேன் மட்டும் தடவி, 30 நிமிடங்கள் கழித்து
கழுவலாம்.உருளைக்கிழங்கை ஸ்லைசாக கட் செய்தோ அல்லது அரைத்தோ அந்த இடத்தில் பயன்படுத்தலாம். மஞ்சள், வேப்பிலை அரைத்துப் போட்ட தண்ணீரில் குளிக்கலாம். சோற்றுக் கற்றாழையை தனியாகவோ, மஞ்சள் சேர்த்தோ தடவலாம்.காட்டன் டவலை, குளிர்ந்த நீரில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்தால், எரிச்சல் குறையும்; ஆனால், ஐஸ் வாட்டரை பயன்படுத்தக் கூடாது. நீர்க்கட்டிகள் உடைந்து, மற்ற இடங்களிலும் பரவ வாய்ப்புள்ளதால், பாதிக்கப்பட்ட இடத்தில் துணி அழுத்தாதபடி, 'ப்ரீ'யாக விட்டு விட வேண்டும்.
சராசரியை விட அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை பச்சையாக சாப்பிட வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிற பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.வெள்ளை அணுக்களை சர்க்கரை குறைக்கும் என்பதால், இந்த சமயத்தில் அதை தவிர்க்க வேண்டும். தவிர, காபி, கூல் டிரிங்ஸ், பொரித்த, வறுத்த உணவுகளை சாப்பிடக் கூடாது. தக்காளி, பூசணி விதை, நட்ஸ் உள்ளிட்டவற்றை குறைத்து
கொள்வது நல்லது.வைட்டமின், 'பி12' உள்ள இறைச்சி, குறிப்பாக, லிவர், மீன், நண்டு, முட்டை; வைட்டமின், 'ஏ' - சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட், பசலைக்கீரை, புரோக்கோலி. வைட்டமின், 'சி' - சிவப்பு, மஞ்சள் நிற குடைமிளகாய், கொய்யா, ஸ்டிராபெர்ரி, ஆரஞ்சு, பப்பாளி. வைட்டமின், 'ஈ' - ரீபைண்ட் பண்ணப்படாத செக்கு எண்ணெய், பாதாம், மீன் உள்ளிட்டவற்றை அதிகம் சாப்பிட்டு வந்தாலே, அக்கி உங்களை அண்டவே அண்டாது. ஒருவேளை, வந்தாலும், இரண்டு மூன்று நாட்களில் தலை தெறிக்க ஓடியே போய்விடும்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement