Advertisement

பக்க வாத்தியம்

தேய்ந்து போன, 'ரெக்கார்டு பிளேட்!'


ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், விவசாயிகள், குடிநீர் பிரச்னை பற்றி விளக்கினர். கிராமங்களில் குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலையில் தவிப்பதாக, பலரும் கொந்தளித்தனர்.கலெக்டர் நடராஜன், 'குடிநீர் பிரச்னையில், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, ஊராட்சி உதவி இயக்குனர் செல்லதுரை விளக்குவார்' என்றார்.இதற்காகவே காத்திருந்தாற் போல, செல்லதுரையும், தயாராக வைத்திருந்த புள்ளி விபரங்களை படிக்க துவங்கினார். இதை பார்த்த மற்ற அதிகாரிகள், 'தேய்ந்து போன ரெக்கார்டு போல, திரும்ப, திரும்ப அதே புள்ளி விபரங்களை வாசிச்சா, நம்மாலயே கேட்க முடியலையே... விவசாயிகள் பாடு திண்டாட்டம் தான்' என, தங்களுக்குள் பேசி சிரித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement