Advertisement

மாற்றத்தை வரவேற்கும் காலம் அக்னி நட்சத்திரம்!

'அக்னி நட்சத்திரம் துவங்கிவிட்டதால், வெப்பம் அதிகரிக்கும்!' வானிலை ஆராய்ச்சி மையத்தின் இந்த அறிவிப்பு செய்தியைக் கேட்டதும், அது வெறும் தட்பவெப்பம் சார்ந்த மாற்றம் என நினைத்துக்கொள்கின்றனர். ஆனால்… அக்னி நட்சத்திரம் காலம் உயிர்த் தீவிரம் அதிகரிக்கும் காலம் - சத்குரு

சத்குரு: வெயில் காலம் துவங்கிவிட்டது. இந்த மாதத்தில் அக்னி நட்சத்திரம் வருகிறது. நாம் விவசாய கலாச்சாரத்தில் இருந்திருந்தால், இந்த அக்னி நட்சத்திரம் என்பது மிக முக்கியமான ஒரு நிகழ்வு. ஏனெனில் வெயில் காலம் வந்தால் மக்கள் தங்கள் வாழ்க்கை முறையையே மாற்றிக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது நாம் வீட்டிற்குள்ளேயே மின்விசிறி, ஏசி போட்டு இருப்பதால் நம் சுற்றுசூழலில் என்ன ஏற்படுகிறது என்பதை அறியாமல் இருக்கிறோம். அப்படியில்லாமல், சற்று வெளியே வந்து உணர்ந்து பார்த்தீர்களென்றால்… ஒரு பெரிய மாற்றம், ஒரு புது தன்மை நடைபெறுவதை பார்க்க முடியும். இந்த தமிழ் கலாச்சாரத்தில், இந்த தென் இந்தியாவில், அக்னி நட்சத்திரம் ஏற்படப் போகையில், உணவு, உடை, செயல் என்று பல வகைகளிலும் மனிதன் தன் வாழ்க்கை முறையையே மாற்றிக்கொள்ள வேண்டும்.
நமது உயிருக்கு பல வகைகளில் மூல காரணமாக உள்ள சூரியன் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறான். தீவிரமின்றி எந்த செயலும் முழுமை பெறாது. நாமும் நமது செயல்களில் தீவிரத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். நமது ஆன்மீக தீவிரம், உயிர் தீவிரம், மனத் தீவிரம் என அனைத்தையும் ஒரு புதிய நிலைக்கு நாம் உயர்த்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இப்போதுள்ள பரிமாணத்திலிருந்து அடுத்த பரிமாணத்திற்கு செல்ல முடியும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (19)

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  வெப்பம் உடலின் கசடுகளை வெளியேற்றி ரத்தத்தை சுத்தமாக்கும் காலம். புற உலகின் அசுத்தங்களை பஸ்பமாக்கும் காலம்.

 • abdul rajak - trichy,இந்தியா

  சூரியன் எப்போதுமே நெருப்பு நட்சத்திரம் தான். பூமியின் சாய் கோணமும், நீள் வட்ட பாதையும், சூரியன் சில சமயங்களின் பெரு மூச்சு விடுவது போல் சுமார் 2 லக்ஷம் தூரம் வரை அதிகப்படியாக கொதித்து எழும்புவதும் பூமியின் அதிகப்படியான வெப்பத்திற்கு காரணம் .

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  நல்ல வெயிட் ஆ பண மூட்டை இருந்தா ....இது என்ன.. இதுக்கு மேலேயும் நாங்களும் சொல்லுவோம்

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  வெய்யில் அதிகம்தான் ...சாமி பேசறதை பார்த்தாலே தெரியுது...

 • sivanesan - nagarkoil,இந்தியா

  மாற்றம்...மாற்றம்.. என்று சொல்வதை பார்த்தல் சாமி அரசியல் பேசுதோ பிஜேபி க்கு ஆதரவா ??

 • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

  ஆமா எங்கே உங்க 60லட்சம் மரமெல்லாம்?

 • kmish - trichy,இந்தியா

  நீங்க காட்டை அழிச்சு கட்டடம் கட்டின்களே அப்புறம் எப்படி சூரியன் தீவிரம் இல்லாமல் இருக்கும் , நீங்க தான் விவசாய நிலத்தை எல்லாம் ஆட்டைய போட்டு டின்களாய்

 • Paranthaman - kadappa,இந்தியா

  உலக வரை படத்தின் மறு பக்கம் மனிதனின் வரை படம். உலக வரை பட்த்தை பல துண்டுகளாக கிழித்த பையன் தன் அப்பாவை பார்த்து கேட்டான் அப்பா மறுபக்கமிருந்த மனிதன் எங்கே என்று. அதற்கு மகனே முதலில் கிழிந்த பக்கத்தில் உள்ள மனிதனை மனிதாக திருத்து பிறகு நீ உலகை காணலாம் என்று அவன் தந்தை சொன்னார். அம்மணி போல் மனிதர்களின் கருத்துக்களை சரியாக கவனித்து சரியா தவறா என்பதை பல நேரம் பலரிடம் கேட்டு சிந்திக்க தெரியாதவர்கள் எப்படி உலகை காண்பார்கள்.

 • Paranthaman - kadappa,இந்தியா

  மனித சக்திக்கு அப்பாற்பட்ட பிரபஞ்சத்தில் பரவி நிற்கும் சூரிய செந்தணல் பர்னர் தீ போல் ஒரே இடத்தில் குவிந்து எரியாது. தீயின் மையம் அதிக வெப்பமாகவும் அதன் சுற்று வட்டம் மிதமாகவும் இருக்கும் எப்போதும் எரியும் தணலிலிருந்து புகையுடன் வெளியேறும் ஜுவாலை நேராக மேல் நோக்கி தான் செல்லும். இதே பார்முலாவில் தான் சூரியனின் வெப்ப கதிர்கள் மேல் நோக்கி பாய்கின்றன. சூரியன் தனது வெப்பத்திலிருந்து புகையாக வெளியேறும் பகுதி கேது. அதே போல் சந்திரன் பூமியிலிருந்து பிரியும் போது அதனருகில் சிகறி நீண்டிருக்கும் சிறு சிறு கற்கள் கூட்டமே ராகு. ஒன்றை பாம்பாகவும் பிரிதொன்றை அதன் தலையாகவும் ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.இவை இரண்டும் சாயா நிழல் கிரகங்கள்.அம்மணி நீங்கள் ஜோதிடக்கலையை ஊன்றி படியுங்கள் உங்கள் கையில் பிரபஞ்சம் தானாக வசப்படும்.

 • Paranthaman - kadappa,இந்தியா

  வட்டம் என்று தான் சொல்லுகிறோம். அதிலென்ன நீள் வட்டம் நீளா வட்டம் என்ற வேறுபாடு. கடிகாரம் வட்டம். ஒடும் பஸ்கள் வாகனங்கள் அனைத்தும் வட்டம்.சுழலும் மின்விசிறி வட்டத்தை காட்டுகிறது. காற்று வருகிறது. வெகு தூரத்தில் உள்ள பொருள் மனிதனின் கண்ணுக்கு வட்டமாக தெரிகிறது. அதனதன் வேலைகளை ஏற்றத்தாழ்வுகளின்றி ஒரு சீராக செய்கின்றன. ஆனால் மனிதனின் வாழ்வு தொடங்கிய இடம் வேறு முடியும் இடம் வேறு. அவன் வாழ்க்கை வட்டமாக அமைய வில்லை. அதனால் கஷ்டங்களுக்கு ஆளாகிறான். மனித சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கை நிகழ்வுகள் திரும்ப திரும்ப ஒரே மாதிரியாக வருவதால் அவைகள் இறைவன் தந்த வட்டத்துக்குள் இயக்கப்படுகின்றன.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement