Advertisement

ஆதியோகி வாழ்ந்ததற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா?

சத்குரு: பொதுவாக ஆதியோகி 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நாம் கணிக்கின்றோம். அந்த காலத்தில் யாரும் வரலாற்று பதிவுகள் செய்ததில்லை, அதனால் ஆதாரங்கள் ஏதும் இல்லை. ஆனால், ஆதியோகியை பற்றிய நினைவு தனித்துவம் ஆனது, ஆழமானது. மக்கள் தலைமுறை தலைமுறைகளை கடந்து இந்த நினைவுகளை விடாமல் சுமந்து வந்திருக்கின்றனர்.

இன்றும் சிவனை பற்றி அறிய வேண்டுமெனில் நீங்கள் ஏதோ ஒரு வரலாற்று புத்தகம் மூலம் அறிந்து கொள்வீர்களா? அல்லது மக்கள் தங்கள் மனதில் சுமந்து இருக்கும் நினைவுகளின் மூலம் அறிவீர்களா? அவரின் தாக்கம் அத்தகையது - காலங்கள் கடந்தும் மக்களால் அவரை மறக்க முடியவில்லை. தொடர்ந்து அவரைப் பற்றி பேசி வந்திருக்கின்றனர். அடுத்த தலைமுறைக்கு தன் பெற்றோரைப் பற்றி அதிகமாக கூறவில்லை, தன் மாமாக்கள் அத்தைகள் நண்பர்கள் பற்றி கூறவில்லை. ஆனால், பல நெடுங்காலங்களுக்கு முன் வாழ்ந்த இந்த மனிதனைப் பற்றி கூறி வருகின்றனர்.

நீங்கள் ஆதாரம் வேண்டினால் என்ன செய்வது? உங்கள் தாத்தா வாழ்ந்ததற்கு என்ன ஆதாரம் உள்ளது? அவர் பிறந்திருந்தால், புகைப்படம் கண்டுபிடிக்கும் முன் இறந்திருந்தால், உங்களிடம் எந்த ஆதாரமும் இருக்கப் போவதில்லை, சரிதானே? உங்கள் தாத்தா மகாராஜாவாக இருந்திருந்தால், அவர் செல்வச் செழிப்பாய் இருந்திருந்தால், தன் உருவப் படத்தை வரையச் செய்திருக்கலாம். அந்தப் படமும் திரித்து வரையப்பட்டதாய் இருக்கலாம். அவருக்கு பெரிய மீசை இல்லாமல் இருந்து இருக்கலாம்; ஆனால், ஓவியர் மகாராஜாவிற்கு அப்படி ஒரு மீசை தேவை என எண்ணி வரைந்து இருக்கலாம்.

ஒரு இளம் பெண்ணுக்கு புற்றுநோய் இருப்பதாக அறியப்பட்டது. “இன்னும் 6 மாதங்களே நீ வாழ்வாய்,” என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். “ஒரு சிறந்த ஓவியரை அழைத்து வாருங்கள். என்னை ஓவியமாய் வரைய விரும்புகிறேன்,” என்று தன் கணவனிடம் தன் விருப்பத்தை தெரிவித்தாள்.

ஓவியரிடம் தன் கழுத்தில் நேர்த்தியான ஒரு வைர ஆரத்தை தான் அணிந்திருப்பது போல வரையச் சொன்னாள். கணவன் கேட்டான், “உன்னிடம் இத்தகைய வைர நகை இல்லையே. பிறகு எதற்காக வரையச் சொன்னாய்?” அதற்கு அவள், “நான் இறந்த பிறகு ஒருவேளை நீங்கள் மறுமணம் செய்து கொண்டால் அந்தப் பெண் இந்த நகையை வீடு முழுக்க தேடியே சாக வேண்டும்,” என்றாள்.

எனவே, ஆதாரம் பற்றி எவர் அறிவார்? ஆனால், இவ்வளவு நெடுங்காலமாக பல கலாச்சாரங்களை கடந்து ஒரு துணைக் கண்டத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் இல்லாத ஒரு மனிதனைப் பற்றி பேசப் போவது இல்லை. இல்லாத ஒருவனை உருவாக்கும் வலிமை, ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்திற்கு மட்டுமே உண்டு. ஆனால், அவ்வாறு ஒரு ஒழுங்கு முறைக்குள் கட்டுப்பட்ட கலாச்சாரம் இதுவல்ல. அப்படி இருந்தும், அந்த ஒரு மனிதனைப் பற்றிய நினைவுகள் தொடர்கின்றன. ஏனெனில், நம் முன்னோருக்கு அவன் முக்கியமானவனாக இருந்திருக்கிறான்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (37)

 • A.S.VENKATESAN - Chennai,இந்தியா

  கடவுள் என்ற வார்த்தையே ஒரு பெயர்ச்சொல் அல்ல.... அது ஒரு வினைச்சொல்.... உனக்கு உள்ளேயே கடந்து பார் அதுவே கட உள் என்பது. அப்போது இந்த பிரபஞ்சமும் உனக்குளே இருப்பதை நீ அறியலாம்.... அறிந்து கொண்டால் நீயும் அடுத்து வருபவர்களுக்கு கடவுளே... நான்கு மறைகளை கற்றவர் ஞானி அல்ல. நான் மறைய கற்றவனே ஞானி.... சிவனும் அதுவே ... ஓம் நமச்சிவாய......

 • Rangaraj - Coimbatore,இந்தியா

  பூமியில் ஒருவன் பிறந்து விட்டால் அவன் மனிதனே ஒருக்காலும் ஆண்டவன் ஆகமுடியாது . பரம்பரை பரம்பரையாக சொல்லி வந்ததால் சிவனை ஆண்டவன் என்கின்றனர் இரு கைகளை குவித்து வைத்தால் வணக்கம் என்று பெற்றோர்கள் சொல்லிவந்ததால் அவ்வாறு மரியாதை செய்கின்றோம். கைகளை கால்களுடன் சேர்த்து வைத்தால் மரியாதை என்று சொல்லி குடுத்து இருந்தால் அவ்வர்று தான் செய்து கொண்டு இருந்திருப்போம். எது எப்படியிருந்தாலும் பூமியில் பிறந்தால் அவன் ஒரு ஜீவராசியே தவிர கடவுள் ஆகமுடியாது

 • Stalin - Kovilpatti,இந்தியா

  எல்லாம் சரிதான் ..,

 • Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா

  அகில உலகையும் கட்டி காட்கும் எம் ஈசன் அடி முடி காணமுடியாத பரம்பொருள்

 • Paranthaman - kadappa,இந்தியா

  மனிதர் கண் இமைகள் மூடித்திறக்கும் நேரத்தை அன்றைய ரிஷிகள் கணக்கிட்டு கஸ்தா காலா முகுர்த்தா என்று பிரித்து மாதம் ஆண்டினை கணக்கிட்டதாக திரு.வினோத் தனெகர் என்பவர் கூறுகிறார். மனித விழிகள் மூடித்திறக்கும் விநாடி நேரங்களை கணிக்கிட்டு மாதம் வருடம் கண்டு பிடிப்பது என்பது கிணற்று நீரை குடத்தால் இறைத்து அளப்பது போன்ற வீண் வேலை. கண் இமைகள் மூடுவதும் திறப்பதும் ஒவ்வொரு மனிதரிடையும் வித்தியாசப்படும். ஒரு சீராக இருக்காது. எனவே மனிதர்கள் ஒரே மாதிரி விழிகளை மூடி திறந்து இமைப்பதாக கருதி காலத்தை காலா கஸ்தா முகூர்த்தா என்ற அடிப்படையில் மனித மாதங்களையும் ஆண்டுகளையும் கணக்கிட்டு தேவ ஆண்டுகளுடன் பெருக்கி சதுர் யுகங்களாக கணக்கிடுவதும் ஏற்புடையதல்ல. மேலும் வினோத் தனெகர் தேவ ஆண்டுகளை 360 மனித ஆண்டுகளில் பெருக்கி வரும் எண்ணிக்கையை தேவ ஆண்டுகளாக சதுர் யுகத்திற்கு கணக்கிட்டுள்ளார். எனது முந்தைய கணக்கீட்டில் தேவ ஆண்டுகளை மனித ஆண்டுகளில் பெருக்குவதற்கு பதிலாக வகுத்து வரும் ஆண்டுகளே மனித ஆண்டுகளாகும் என்று குறிப்பிட்டு அவைகளை உலக பிரளயத்தை இலக்காக வைத்து சதுர் யுகங்களாக பிரித்து காட்டியுள்ளேன். திரு. வினோத் தனெகர் மனித ஆண்டுகளை தேவ ஆண்டுகளுடன் பெருக்கி தந்துள்ள விவரங்களையும் அதன் இறுதியில் குறிப்பிட்டுள்ளேன். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து பூமி சுழற்சி படிப்படியாக குறைந்து வந்துள்ளது. ஒரு பம்பரத்தை கயிற்றில் சுற்றி வேகமாக வீசி சுழல விட்டால் அதன் சுழற்சி வேகம் படிப்படியாக குறைந்து ஒரு நிலையில் சுழற்சி நின்று பம்பரம் தானாக கீழே விழுந்து விடும். பிரமானந்த புராணம் மஹாபாரதம் விஷ்ணு புராணம் பகவத் கீதை வாயு புராணம் ஆகியவற்றில் கூறப்படும் சதுர் யுக கணக்கீடுகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக உள்ளன. அவைகள் அனைத்திலும் சதுர் யுகங்களுக்கான மனித ஆண்டுகள் தேவ ஆண்டுகள் ஒரே அடிப்படையில் கணக்கிடப்படவில்லை. ஒரு ஆண்டுக்கான தற்போதுள்ள பூமியின் சுழற்சி 360. அதற்கு அதிகமாக முந்தைய யுகங்களில் சுழன்றுள்ளது. கணக்கு தெரியாதவற்றை காந்தி கணக்கில் எழுது என்பார்கள். அது போல் புராண காலத்தவர்கள் 360 நாட்களுக்கு மேல் பூமிசுழன்ற நாட்களை தேவகணக்கில் சேர்த்து விட்டனர்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இங்கே நடந்துகொண்டு இருப்பது தர்க்க சாஸ்திரம் , இதில் வென்றவர்களும் இல்லை தோற்றவர்களும் இல்லை. அவரவர் யோசனைக்கு எட்டியது , அவரவர் ஆராய்ந்து , அவரவருக்கு உண்மை.

 • Paranthaman - kadappa,இந்தியா

  சதுர் யுகங்கள் ஒரு விளக்கம். இந்து மத வேத கால வளையத்துக்குள் வகுக்கப்பட்டவை. சதுர் யுகங்கள். இந்தியா தவிர்த்து வேறெங்கிலும் இந்து மதம் இல்லை. வேத இதிகாசங்களில் யுக எண்ணிக்கைகளையும் அவைகளுக்கான காலத்தையும் வகுத்தவர் பலர். வேத காலத்தவர் மனித ஆண்டுகளை வகுக்கவில்லை. யுகந்தோறும் பூமி சுழற்சி மாற்றம் பற்றி அவர்கள் தெரிந்திருக்க வில்லை. வேத கால ஆரம்பமே ஸ்ரீகிருஷ்ணர் கி.மு 3112ல் பிறந்த பத்தாண்டுகளுக்கு முன்னரே கி.மு 3102ல் துவங்கியது. வேத காலத்தினர் யாகங்களையும் தவங்களையும் புராண இதிகாசங்களையும் தேவர்கள் சார்பில் செய்தனர். அதில் ஒன்று அவர்கள் தேவர்களுக்காக வகுத்த தேவ ஆண்டுகள். உலக பிரளயத்திற்கு பின்னர் இமயத்தில் தோன்றிய பல அதிசய பிறவிகளான பிரம்ம ரிஷிகளாலும் தவ யோகிகளாலும் ஞானிகளாலும் பிரம்மன் விஷணு சிவன் போன்ற பல அதிசய தெய்வ பிறவிகளாலும் வேத காலம் உருவாக்கப் பட்டது. மக ரிஷிகள் முனிவர்கள் தேவர்களை வைத்தே யுகங்களை கணக்கிட்டனர். முக்காலமும் உணர்ந்த ரிஷிகள் உலகெங்கிலும் ககன வழியாக பறந்து திரிந்த போது உலகின் மற்ற பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள் வாழ்ந்த பகுதிகள் எதுவும் அவர்கள் கட் புலன்களில் படவே இல்லை. ஒட்டு மொத்த உலக அளவிலான மனித ஆண்டுகள் பற்றியும் தேவ ஆண்டுகள் பற்றியும் அவர்கள் வேத இதிகாசங்களில் ஏதும் சொல்லவில்லை. இந்து மதம் என்ற அப்போதிருந்த ஒரு சிறு வட்டத்துக்குள் அவர்கள் இயங்கி இருக்கிறார்கள். உலகப் பிரளயம் தோன்றிய காலம் கி.மு.9564. அதற்கு முன் இன்று வரையுள்ள காலத்தை சதுர் யுகங்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். 11581 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தேவ கணக்கிலான சதுர் யுகங்களை மனித ஆண்டுகளில் கணக்கிடல் வேண்டும். வேத கால கணக்கில் கிரேதா யுகம் 17,28,300 தேவ ஆண்டுகள். இதை 360 என்ற ஒரு ஆண்டுக்கான மனித ஆண்டில் வகுத்தால் கிரேதா யுகம் 4,800 மனித ஆண்டுகள். அதாவது கி.மு. 11500ல் இருந்து மனித ஆண்டுகள் 4800 ஐ கழித்தால் கி.மு 6700வரை மனிதரின் கிரேதா யுகம். திரேதாயுகம் தேவ ஆண்டுகள் 12,96,000.அதை மனித ஆண்டுகள் 360ல் வகுத்தால் வருவது 3600 மனித ஆண்டுகள். அதாவது கி.மு 6700 முதல் கி.மு 3100 வரை திரேதா யுகம். துவாபர யுகம் 8,64,000 தேவ ஆண்டுகள் அதை 360 மனித ஆண்டுகளில் வகுத்தால் வருவது 2400 மனித ஆண்டுகள். அதாவது கி.மு 3100 முதல் கி.மு 700 ஆண்டுகள் வரை துவாபர யுகம். கலியுகம் 4,32,000 தேவ ஆண்டுகளை 360 மனித ஆண்டுகளில் வகுத்தால் வருவது 1200 மனித ஆண்டுகள்.அதாவது துவாபர யுகத்தின் கி.மு. 700 முதல் கி.பி 500 வரை கலியுகம். இது ஒரு சதுர்யுகம். வேத காலத்திற்கு பின் தோன்றிய ஆரிய பட்டர் வராகமிகிரர் போன்ற வானியல் வல்லுநர்கள் காலத்தில் பூமியின் சுழற்சியை யுக வாரியாக கணக்கிட்டு கணக் கிட்டு மனித ஆண்டுகளை வகுத்துள்ளனர். கிரேதா யுகம் இன்றைய ஒரு நாளைய பூமி சுழற்சிக்கு ஒரு தடவை 6மணி என நான்கு பங்குஅதிகம். திரேதா யுகம் இன்றைய ஒரு நாளைய பூமி சுழற்சிக்கு ஒரு தடவை 12 மணி என இரண்டு பங்குஅதிகம். துவாபர யுகம் இன்றைய ஒரு நாளைய பூமி சுழற்சியில் ஒரு தடவை18 மணி என ஒன்றரை பங்கு அதிகம். கலியுகத்தில் ஒரு பங்கு அதாவது ஒரு நாள் சுழற்சி 24 மணி. கி.பி 700 வரை கலி நயகம் முடிந்து கி.பி.700 முதல் இன்று வரை நடப்பில் உள்ளது சூப்பர் கலியுகம். இன்னும் சில நூற்றாண்டுகளில் பூமி நீரால் சூழப்பட்டு அழியும். கிரேதா யுகம் 4000 தேவ ஆண்டுகள். அதற்கு சந்தியா 400 சந்தியம்சா 400 என மொத்தம் 4800 தேவ ஆண்டுகள். இதை 360 என்ற ஒரு ஆண்டுக்கான மனித நாட்களில் பெருக்கினால் திரேதா யுகம் 17,28,000 மனித ஆண்டுகள். திரேதாயுகம் 3000 தேவ ஆண்டுகள் அத்துடன் சந்தியா 300 தேவ ஆண்டுகள் சந்தியாம்சா 300 தேவ ஆண்டுகள் கூட்டினால் 3600 தேவ ஆண்டுகள். அதை 360ஆல் பெருக்கினால் 12,96,000 மனித ஆண்டுகள். துவாபர யுகம் 2000 தேவ ஆண்டுகள். சந்தியா 200 மற்றும் சந்தியாம்சா 200 தேவ ஆண்டுகளை சேர்த்து 2400 தேவ ஆண்டுகளை ஒருவருடத்திற்குரிய மனித நாட்களான 360 ஆல் பெருக்கினால் 8,64,000 மனித ஆண்டுகள். கலியுகம்1000 தேவ ஆண்டுகள். அத்துடன் சந்தியா தேவ ஆண்டுகள் 100 மற்றும் சந்தியம்சா தேவ ஆண்டுகள் 100 சேர்த்து 1200 தேவ ஆண்டுகளை 360 ஆல் பெருக்கினால் 4,32,000 மனித ஆண்டுகள். இது ஒரு சதுர் யுகத்தின் சுழற்சி.

 • Paranthaman - kadappa,இந்தியா

  இன்றைய தமிழ் இனிமையான தமிழ். இனம் மதம் மொழி என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் எளிமையாக விரைந்து பேசும் வகையிலும் புரிந்துக்கொள்ளும் வகையிலும் நடை முறையில் உள்ள தமிழ். மனித உணர்ச்சிகளை சொல்லிலும் செயலிலும் இயல் இசை நாடக பாணிகளிலும் அப்படியே அவிழ்த்துக் கொட்டும் வல்லமை உள்ள மொழி. தம்மை இசையால் போற்றி புகழும் கடவுளும் புரிந்துகொள்ளும் மொழி தமிழ். உலகில் எங்கும் இல்லாத மிக பழங்கால ஓலைச்சுவடிகளில் இருந்து அப்படியே அச்சில் கொண்டு வரப்பட்ட நூல்களில் பயன் படுத்தியுள்ள செந்தமிழ் இன்றைய சரளமான பேச்சு தமிழில் பயன்படுத்துவது கடினம். இலக்கண ரீதியில் அர்த்த திருத்தமுடன் தமிழ் நூல்களில் எழுதப்பட்ட அன்றைய செந்தமிழ் பைந்தமிழ் வண்டமிழ் ஒண்டமிழ் என்ற மொழி உச்சரிப்புகளில் பல மாறுபாடுற்ற தமிழ் மொழி இன்று எழுத்துக்களில் ஒரளவு பயன்பட்டாலும் பேச்சு தமிழில் பயன்படவில்லை. எனவே திருமூலர் திரு மந்திரம் என்ற மிக அரிய ஆன்மீக நூல் போன்றுள்ள பல அரிய ஆன்மீக நூல்களை எளிய தமிழில் பள்ளி மாணவர்கள் புரிந்து கற்றுக்கொள்ளும் வகையில் தமிழ் அறிஞர்களால் எழுதி பள்ளி பாடங்களில் சேர்க்க வேண்டும். இந்து மதத்தில் உள்ள செழுமையான ஆன்மீகம் போன்று எதுவும் பிற மதங்களில் இல்லை. அவைகள் ஆன்மீகத்தை பொருளாதாரத்தில் பார்க் கின்றன. நாட்டில் ஆன்மீகம் மாணவர்களின் இளவயது இருதயத்தில் ஊறினால் நாட்டில் பல வன்முறைகள் அழிந்து விடும். மனிதர்களின் கொடுஞெசெயல்களை காவல் துறை மட்டுமின்றி ஆன்மீகத்தாலும் கட்டுப்படுத்த முடியும்.

 • Sathyamurthy - Chennai,இந்தியா

  தெய்வப்புலவர் திருமூலர் அருளிய திருமந்திரம் ஒன்று தான்" யோகம்" குறித்து முழுமையாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட ஆகம நூல் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது..மூன்றாம் தந்திரத்தில் அஷ்ட்டாங்க யோகத்தின் இரண்டாவது அங்கமான நியமத்தில் வரும் பாடல் அதன் பொருள் கீழே காண்க: 539. தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ் சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து நிவம்பல செய்யின் நியமத்த னாமே.1 (ப. இ.) 'உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை'யாகிய தவமும், திருவைந்தெழுத்தைக் கணித்தலாகிய செபமும், சிவனை நினைத்தலாகிய மகிழ்வும், முப்பொருளுண்மை கைக்கொள்வதாகிய மெய்ப்பொருள் ஆத்திகமும், சிவனடியார்களுக்குப் பணிந்து உள்ளன. உவந்து கொடுக்கும் தானமும், சிவனை வழிபடும் விரதமும், செந்தமிழ்த் திருமுறை சித்தாந்த நூல்களை ஓதலும், ஓதுவித்தலும், கேட்பித்தலும், கேட்டலும், நாடலும் முதலிய நயனார் மெய்யுணர்வு வேள்வி ஐந்தும் செய்தலும், திருவைந்தெழுத்தால் ஓம்பும் அகத்தழலும், திருவைந்தெழுத்தால் புரியும் அகப்பூசையும், அருளால் சிவனை மறவா நினைவால் உறவெனக் கொள்ளும் ஒண்மதியும் என்று சொல்லப்படும் பத்தும் நத்தும் நன்றாற்றலின் வித்தாகும். சந்தோடம் - மகிழ்ச்சி. ஆத்திகம் - கடவுட் கோள். திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தும் சிவா பெருமானைப்போற்றியே அமைந்துள்ளது.. மூவாயிரம் பாடல்களுடன் யோகத்தின் அங்கங்களையும் ஆகமவிதிகளையும் பின்பற்றி யோகம் பயிலன்ற்வர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை..ஆனால் திருமூலர் அவர்கள் தனது நூலில் யோகிகள் எப்படியெல்லாம் இருக்க கூடாது என்பதை தெள்ள தெளிவாக குறிப்பிட்டுள்ள பாடல் அதன் பொருள் காண்க ஆறாம் தந்திரம் 8. அவ வேடம் 1627. ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன் வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள் ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந் தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே. (ப. இ.) கூடா ஒழுக்கத்தினராய்த் தவவேடம் கொண்டு பிறரை அஞ்சுவித்துத் திரிவார்க்குப் பயன் ஆடம்பரமான சோறு கறி உண்பதேயாம் பேதைகளே பிறப்பின் பயன் இதுவோ? சிவனார் திருவுருவினைக் கண்டவுடன் மெய்ம்மறந்து ஆடியும், பொய்யில் திருமுறை பாடியும், இன்பக் கண்ணீர் பெருக்கி அழுதும், மகிழ்ச்சி மேலீட்டால் அரற்றியும் இம்முறையாகத் தேடியுங் காணுங்கள். இதுவே பிறவிப்பயன். (அ. சி.) வேடங்கள் கொண்டு - பொய்யாகத் தவசி வேடம் பூண்டு. வெருட்டிடும் - மயக்கும். திருமந்திரத்தனில் கூறப்பட்டுள்ள முறைகளை பின்பற்றி யோகத்தில் ஈடுபட ஆசைகளை துறந்து சீவனை சிவனோடு இணைக்க தவம் மேற்கொள்ள யார் முன்வருவார்கள்? மூச்சு காற்றினை இழுத்து அடக்கிகுண்டலினி சக்தியை பெறவும் சிவ ஒளியை தரிசிக்கவும் சமாதி நிலையை அடையவும் பின்பற்றவேண்டிய அருமையான யோகமுறைகளை குறைந்தது பத்து ஆண்டுகளாவது பயில வேண்டும். யோகா என்பது இன்று வியாபாரம் : உடலை வளைத்து நெளித்து செய்யப்படும் ஆசனங்கள் என்ற உடற்பயிற்சி மட்டுமே இன்று யோகா என்று பரவலாக அறியப்பட்டுள்ளது.ஆன்மிகம் சிறிதும் இல்லாதது.,வியாபாரம்,விளம்பரம்சுக போகங்களை அனுபவிக்க சுயநலத்துடன் வாழ கிடைத்த குறுக்கு வழி .குருமார்கள் இன்று குபேரர்களை விடவும் மகா சக்ரவர்த்தியை விடவும் செல்வம் கொழிக்கும் ஆண்டவனின் அவதாரங்கள். உலகில் பிறந்தவர்கள் அனைவரும் ஒரு நாள் சாகத்தான் போகிறார்கள். திருமந்திரத்தில் மட்டும்தான் சாவை தள்ளிப்போடவும் நோய்நொடி இன்றி நீண்ட காலம் வாழவும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளதை உணர்ந்தாரில்ல.யோகம் புனிதமானது. யோகா இன்றுள்ளது ? தெய்வப்புலவர் திருமூலர் அருளிய திருமந்திரம் ஒன்று தான்" யோகம்" குறித்து முழுமையாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட ஆகம நூல் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது..மூன்றாம் தந்திரத்தில் அஷ்ட்டாங்க யோகத்தின் இரண்டாவது அங்கமான நியமத்தில் வரும் பாடல் அதன் பொருள் கீழே காண்க: 539. தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ் சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து நிவம்பல செய்யின் நியமத்த னாமே.1 (ப. இ.) 'உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை'யாகிய தவமும், திருவைந்தெழுத்தைக் கணித்தலாகிய செபமும், சிவனை நினைத்தலாகிய மகிழ்வும், முப்பொருளுண்மை கைக்கொள்வதாகிய மெய்ப்பொருள் ஆத்திகமும், சிவனடியார்களுக்குப் பணிந்து உள்ளன. உவந்து கொடுக்கும் தானமும், சிவனை வழிபடும் விரதமும், செந்தமிழ்த் திருமுறை சித்தாந்த நூல்களை ஓதலும், ஓதுவித்தலும், கேட்பித்தலும், கேட்டலும், நாடலும் முதலிய நயனார் மெய்யுணர்வு வேள்வி ஐந்தும் செய்தலும், திருவைந்தெழுத்தால் ஓம்பும் அகத்தழலும், திருவைந்தெழுத்தால் புரியும் அகப்பூசையும், அருளால் சிவனை மறவா நினைவால் உறவெனக் கொள்ளும் ஒண்மதியும் என்று சொல்லப்படும் பத்தும் நத்தும் நன்றாற்றலின் வித்தாகும். சந்தோடம் - மகிழ்ச்சி. ஆத்திகம் - கடவுட் கோள். திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தும் சிவா பெருமானைப்போற்றியே அமைந்துள்ளது.. மூவாயிரம் பாடல்களுடன் யோகத்தின் அங்கங்களையும் ஆகமவிதிகளையும் பின்பற்றி யோகம் பயிலன்ற்வர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை..ஆனால் திருமூலர் அவர்கள் தனது நூலில் யோகிகள் எப்படியெல்லாம் இருக்க கூடாது என்பதை தெள்ள தெளிவாக குறிப்பிட்டுள்ள பாடல் அதன் பொருள் காண்க ஆறாம் தந்திரம் 8. அவ வேடம் 1627. ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன் வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள் ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந் தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே. (ப. இ.) கூடா ஒழுக்கத்தினராய்த் தவவேடம் கொண்டு பிறரை அஞ்சுவித்துத் திரிவார்க்குப் பயன் ஆடம்பரமான சோறு கறி உண்பதேயாம் பேதைகளே பிறப்பின் பயன் இதுவோ? சிவனார் திருவுருவினைக் கண்டவுடன் மெய்ம்மறந்து ஆடியும், பொய்யில் திருமுறை பாடியும், இன்பக் கண்ணீர் பெருக்கி அழுதும், மகிழ்ச்சி மேலீட்டால் அரற்றியும் இம்முறையாகத் தேடியுங் காணுங்கள். இதுவே பிறவிப்பயன். (அ. சி.) வேடங்கள் கொண்டு - பொய்யாகத் தவசி வேடம் பூண்டு. வெருட்டிடும் - மயக்கும். திருமந்திரத்தனில் கூறப்பட்டுள்ள முறைகளை பின்பற்றி யோகத்தில் ஈடுபட ஆசைகளை துறந்து சீவனை சிவனோடு இணைக்க தவம் மேற்கொள்ள யார் முன்வருவார்கள்? மூச்சு காற்றினை இழுத்து அடக்கிகுண்டலினி சக்தியை பெறவும் சிவ ஒளியை தரிசிக்கவும் சமாதி நிலையை அடையவும் பின்பற்றவேண்டிய அருமையான யோகமுறைகளை குறைந்தது பத்து ஆண்டுகளாவது பயில வேண்டும். யோகா என்பது இன்று வியாபாரம் : உடலை வளைத்து நெளித்து செய்யப்படும் ஆசனங்கள் என்ற உடற்பயிற்சி மட்டுமே இன்று யோகா என்று பரவலாக அறியப்பட்டுள்ளது.ஆன்மிகம் சிறிதும் இல்லாதது.,வியாபாரம்,விளம்பரம்சுக போகங்களை அனுபவிக்க சுயநலத்துடன் வாழ கிடைத்த குறுக்கு வழி .குருமார்கள் இன்று குபேரர்களை விடவும் மகா சக்ரவர்த்தியை விடவும் செல்வம் கொழிக்கும் ஆண்டவனின் அவதாரங்கள். உலகில் பிறந்தவர்கள் அனைவரும் ஒரு நாள் சாகத்தான் போகிறார்கள். திருமந்திரத்தில் மட்டும்தான் சாவை தள்ளிப்போடவும் நோய்நொடி இன்றி நீண்ட காலம் வாழவும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளதை உணர்ந்தாரில்ல.யோகம் புனிதமானது. யோகா இன்றுள்ளது ?புரியாத புதிர் பொருள் ஈட்ட சுலபமான வழி..ஆன்மீகம் கேள்விக்குறி?

 • Paranthaman - kadappa,இந்தியா

  சதுர் யுகங்களை தேவ ஆண்டுகளாகவும் மனித ஆண்டுகளாகவும் கணக்கிடலாம். அந்தந்த யுகங்களில் பூமி படிப்படியாக தன் சுழற்சியில் குறைந்து வந்துள்ள சுய சுழற்சிகளின் எண்ணிக்கைகளை இன்றைய மனித நாள் ஒன்றுக்கு 24 மணி நேரம் என்ற அடிப் படையில் தேவ மணி தேவ நாட்கள் தேவ மாதம் தேவ ஆண்டுகள் என பலவற்றை கணக்கிட முடியும்.ஒரு ஆண்டுக்கு 360 நாட்கள் மனித நாட்கள். முந்தைய யுகங்களில் 360 நாட்கள் என்ற ஒரு ஆண்டுக்கு மேற்பட்ட நாட்களில் பூமி சுழன்றுள்ளது. அதை தேவ ஆண்டுகளாக கணக்கிட்டுள்ளனர். கி.மு.9564க்கு முன் இன்றைய 21 விநாடிகளில் அன்றைய பூமி 4114 தடவைகள் அல்லது தேவ விநாடிகளாக சுழன்றது. 4114 ஐ 21ல் வகுக்க ஒரு விநாடிக்கு அன்றைய பூமி சுமார் 196 தடவை அதாவது 196 தேவ விநாடிகளில் சுழன்றது. ஒரு நாளைக்குள்ள 86,400 மனித விநாடிகளை 196ல் வகுத்தால் 440 தடவை அல்லது தேவ நாட்களில் சுழன்றது. அவ்வாறு ஒரு மனித ஆண்டின் 360 நாட்களில் சுமார் 1,58,400 முறை சுழன்றது. (என் முன் கருத்து பதிப்பில் தன்னைத்தானே இன்றைய ஒரு நாளைக்கு சுமார் 4115 தடவைகள் சுழன்றதாக குறிப்பிட்டது தவறு. தவற்றுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.) எனவே ஒரு மனித ஆண்டுக்கு 1,58,400 தேவ ஆண்டுகளாகிறது.இதை போன்று மற்ற யுகங்களிலும் கணக்கிட வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement