Advertisement

இணையதள திருட்டுகளில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி?

கம்ப்யூட்டர், லேப் - டாப், டேப்லட் போன்றவற்றை பயன்படுத்துபவரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, அவற்றை பயன்படுத்தி, பணம் அபகரிக்கப்படும் சம்பவங்கள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன. கம்ப்யூட்டரை பயன்படும்போது, பாதுகாப்பாக இருப்பது எப்படி எனத் தெரிந்து கொள்ளலாம்.

l கம்ப்யூட்டர் உலகில், 100 சதவீத பாதுகாப்பு இருக்க சாத்தியமே இல்லை. பாதுகாப்பு நடைமுறைகளில் உள்ள இடைவெளிகளை, கிரிமினல்கள் சாதுரியமாக பயன்படுத்தி ஏமாற்றி வருவது,
ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன
l மோட்டார் வாகனங்களில் கூட, மென்பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால், கார்கள், நடமாடும் கம்ப்யூட்டர்களாக உருமாறி வருகின்றன
l இதனால், கிரிமினல்கள், தொலைதுாரத்தில் இருந்தபடியே, கார்களை மடக்கி, கொள்ளை அடிப்பது சாத்தியமாகி வருகிறது
l இத்தகைய சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, மிக வலிமையான, 'பாஸ்வேர்டை' உருவாக்கி பயன்படுத்த வேண்டும்; அதை, வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளவே கூடாது
l ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களான, வங்கி கணக்கு எண்கள், கிரெடிட், டெபிட் கார்டு எண்கள், அவற்றுக்கான பாஸ்வேர்டுகளை, இ - மெயில் மூலம் ஒருபோதும் அனுப்பவே கூடாது; மிக அவசரமான சமயத்திலும் கூட, அந்த தவறை செய்யாதீர்கள்
l இத்தகைய தகவல்களை, உங்கள் தனிப்பட்ட கம்ப்யூட்டரில் சேமித்து வைக்கும்போது, மிக வலிமையான பாஸ்வேர்டு பயன்படுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
l உங்கள் தனிப்பட்ட கம்ப்யூட்டரை, நீங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; வேறு யாரையும் பயன்படுத்த அனுமதிக்காதீர்.
l உங்கள் வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்களிடம் இருந்து, பாஸ்வேர்டு சொல்லும்படி வரும், இ - மெயில் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருங்கள்
l நேர்மையான எந்த நிறுவனமும், உங்கள் பாஸ்வேர்டு தரும்படி கேட்காது
l அடிக்கடி, உங்கள் பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளுங்கள்
l உங்கள் குழந்தைகள், விரும்பத்தகாத இணையதளங்களில் சென்று, முகம் தெரியாத நபர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை தடுக்கும் வகையில், உங்கள் குழந்தைகளின்,
இன்டர்நெட் பயன்பாட்டை கண்காணியுங்கள்
l இந்த விஷயத்தில் உங்கள் குழந்தைகள் முரண்டு பிடித்தாலும், கண்டிப்பாக இருங்கள். சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு, உங்கள் குழந்தைக்கு ஏற்படும் வரை, அவர்கள் பெரியவர்களாகும் வரை, இந்த கண்டிப்பை பின்பற்றுங்கள்.

ஆர்.கே.ராகவன்

சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர்

rkraghu@hotmail.co.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement