Advertisement

ஹேமா ராகேஷின் 'தொன்மையின் அடிச்சுவடு'

ஹேமா ராகேஷின் 'தொன்மையின் அடிச்சுவடு'


ஹேமா ராகேஷ்
எண்ணம் சிறப்பானால் எல்லாம் சிறப்பாகும் என்ற கொள்கைக்கு சொந்தக்காரர்.

கேளிக்கை, விருந்து, சுற்றுலா,கார்,பணம்,பகட்டு என்று உலாவரும் இளைஞிகள் மத்தியில் இவர் வேறுமாதிரி.

தொன்னுாறு வயதைத் தொட்டவர் கூட தொடத்தயங்கும் தொன்மையான விஷயங்களை துணிந்து எடுத்து அலசி ஆராய்வதில் ஆர்வம் காட்டுபவர்.


தனியார் தொலைக்காட்சியின் முன்னனி ஊடகவியலாளர்.நாட்டு நடப்புகளை அலசும் அன்றாட பரபரப்பான அலுவல்களுக்கு நடுவிலும் தான் பிறந்த கிருஷ்ணகிரி மண்ணிற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணியவர். ஒன்பது மாதகாலம் சிரமப்பட்டு இவர் உருவாக்கிய அற்புதமான ஆவணப்படம்தான் தொன்மையின் அடிச்சுவடு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் இரண்டாயிரம் ஆண்டு பழமையான பாறை ஒவியங்கள்,தெய்வமாக வழிபடும் பழமையான சிற்பங்கள்,நடுகல்,கல்திட்டை என்று பல விஷயங்களை இந்த ஆவணப்படம் 30 நிமிடம் சுவராசியமாக சொல்கிறது.

ஆவணபடத்தின் இயக்குனர் ஹேமா ராகேஷ் ஒவ்வொரு இடத்திற்கும் தன் குழுவினரோடு பயணம் செய்வது நாமே பயணம் செய்வது போன்ற உணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் ஔிப்பதிவு பிரமாதமாக அமைந்துள்ளது. பாறை ஒவியங்களை தேடி தேடி கேமிராவும் இயக்குனரும் டார்ச் வெளிச்சத்தில் குகை்குள் போய்வருவது பார்வையாளர்களுக்கு திரில்லான விஷயமாகும்.
அதே போல ஹேமா ராகேஷின் குரல் இந்த ஆவணபடத்திற்கு மிகப்பெரிய பலம் சொல்லவந்த விஷயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது.சமூக விரோதிகளால் அழிந்துவரும் கல்திட்டை உள்ளீட்ட பழமையான விஷயங்களை காப்பாற்ற வேண்டும் என்கின்ற இவரது ஆதங்கத்திற்கு வெற்றி கிடைக்கவேண்டும்.


ஆவணப்படத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு கதிரவன் அவர்கள் வெளியிட்டு சிறப்பித்து உள்ளார்.அடுத்தகட்டமாக ஆவணப்படத்தை கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்திக்கொண்டு இருக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி பழமையை போற்றும் விரும்பும் ஒவ்வொருவரும் பார்த்து பாதுகாக்கவேண்டிய ஒன்றே இந்த ஆவணப்படம்.இதன் தேவைக்கும் விசாரணைக்கும் தொடர்பு கொள்ள வேண்டியவர் பிரபாகர்:9994368501.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (4)

 • JeevaKiran - COONOOR,இந்தியா

  எங்க ஊருயா. இதை நாம் பஸ்ஸில் போகும்போதும் கூட சில இடங்களில் காணலாம்.

 • Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா

  முன்பெல்லாம் ஊர் கட்டுப்பாடு என்று போன்றிருக்கும். தற்போது பெரும்பாலானோர் பல்வேறு காரணங்களால் புலம் பெயர்ந்ததினால் எங்கும் ஒற்றுமை குலைத்துவிட்டது. சொந்த ஊரிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் அங்கு திரும்பி போக முடிவதில்லை அல்லது தயங்குகிறார்கள். ஒவ்வொருவரும் எதோ ஒரு வகையில் தன பிறந்த மண்ணுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம். வாழ்க ஹேமா அவர்களின் முயற்சி.

 • மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  வாழ்த்துக்கள் மதிப்புமிகு ஹேமா ராகேஷி அவர்களே உங்களின் இந்த தாகம் எனக்கும் உள்ளது ஆனால் எனது சூழ்நிலையால் இயலவில்லை என் மனதில் தோன்றியதெல்லாம் உங்களின் மூலமாக காண்கிறேன் கோடானுகோடி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் வெற்றி பயணம் .....

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  இந்த ஆவணப்படம் எங்கே பார்க்க முடியுமா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement