Advertisement

சுழன்று வீசிய 'சுழல்' பந்துவீச்சு: 'டெட் பால்' என்ற அம்பயர்

புதுடில்லி: இந்திய உள்ளூர் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் வீசிய பந்துவீச்சு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேட்ஸ்மேன்கள் விதவிதமான 'ஷாட்' அடித்து ரன் மழை பொழிவர். இதுபோல பவுலர்களும் முயற்சிப்பர். இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பவுலிங் துவக்கத்தில் புதிராக இருந்தது. தற்போது இவர் தான் உலகின் 'நம்பர்-1' பவுலர். இதேபோல 2016 ஐ.பி.எல்., தொடரில் அறிமுகம் ஆன குஜராத் அணியின் ஷிவில் கவுஷிக், இலங்கையின் மலிங்கா, தென் ஆப்ரிக்காவின் பால் ஆடம்ஸ் என பலரும் பல வகையில் பந்து வீசினர்.

தற்போது இந்திய உள்ளூர் தொடர் சி.கே.நாயுடு (23 வயது) போட்டியில் புதிய வகையில் பந்து வீசினார் சிவா சிங். பெங்கால் அணிக்கு எதிராக களமிறங்கிய உ.பி., சுழற்பந்து வீச்சாளர் சிவா சிங், பந்து வீச வந்தார். இவர் கிரீசிற்குள் வந்த வேகத்தில் அப்படியே ஒரு முழு சுற்று சுற்றி (360 டிகிரி) பிறகு பந்தை சுழற்றி வீசினார்.

பெங்கால் அணி வீரர்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் அம்பயர் வினோத் சேஷன் இது 'டெட் பால்' என அறிவித்தார். இதுகுறித்து சிவா சிங் கூறுகையில்,'' ஒருநாள் மற்றும் 'டுவென்டி-20' போட்டிகளுக்கு என வித்தியாசமான முறையில் பந்து வீசுகிறேன். பெங்கால் வீரர்கள் சிறப்பான முறையில் 'பார்ட்னர்ஷிப்' அமைக்க முயற்சித்தனர். இதனால் வித்தியாசமாக பவுலிங் செய்தேன். இதை 'டெட் பால்' என்றதால் ஏன் என அம்பயரிடம் கேட்டேன். இதற்கு முன் விஜய் ஹசாரே தொடரில் கேரள அணிக்கு எதிராக இப்படித் தான் பந்து வீசினேன். பேட்ஸ்மேன்கள் நின்ற நிலையில் இருந்து முழுமையாக திரும்பி 'சுவிட்ச் ஹிட்' முறையில் பந்தை அடிக்கின்றனர். ஆனால் பவுலர்கள் இதுபோல செய்தால் ஏற்க மறுப்பது ஏன்,'' என்றார்.

வான் வரவேற்பு

இதுகுறித்து இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறுகையில்,'' பவுலர்கள் புதிய முறையில் பந்துவீசவில்லை என்கிறோம். இதுபோன்ற பந்துவீச்சை வரவேற்க வேண்டும்,'' என்றார்.



Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement