Advertisement

சீன பாட்மின்டன்: காலிறுதியில் சிந்து தோல்வி

புகுசு: சீன ஓபன் பாட்மின்டன் தொடரின் காலிறுதியில் இந்திய வீராங்கனை சிந்து தோல்வியடைந்தார்.

சீனாவில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, சீனாவின் ஹே பிங் ஜியாவோவை சந்தித்தார். முதல் செட்டில் துவக்கத்தில் இருந்து முன்னிலை பெற்ற சிந்து கடைசி நேரத்தில் கோட்டை விட, 17-21 என இழந்தார். இரண்டாவது செட்டில் எழுச்சி பெற்ற சிந்து 21-17 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் ஒரு கட்டத்தில் 6-11 என பின் தங்கினார். பின் 15-16 என நெருங்கினார். கடைசியில் இந்த செட்டையும் 15-21 என இழந்தார். ஒரு மணி நேரம், 9 நிமிடங்கள் நடந்த போட்டியின் முடிவில் சிந்து 17-21, 21-17, 15-21 என்ற செட்கணக்கில் போராடி வீழ்ந்தார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement