Advertisement

பைனலில் ராம்குமார் ஜோடி

பிராடிஸ்லாவா: சுலோவாகியாவில் நடக்கும் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், பெலாரசின் ஆன்ட்ரி வாசிலேவ்ஸ்கி ஜோடி முன்னேறியது.

சுலோவாகியாவில், ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், பெலாரசின் ஆன்ட்ரி வாசிலேவ்ஸ்கி ஜோடி, ஸ்பெயினின் ஜெரார்டு கிரானோலர்ஸ், டேவிட் மரேரோ ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை 7-5 என போராடி கைப்பற்றிய ராம்குமார் ஜோடி, 2வது செட்டை 4-6 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' அசத்திய இந்திய-பெலாரஸ் ஜோடி 10-6 என வென்றது. ஒரு மணி நேரம், 24 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் ராம்குமார் ஜோடி 7-5, 4-6, 10-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement