Advertisement

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் தோல்வி

சென்னை: புரோ கபடி தொடரின் லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 27-36 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் அணியிடம் வீழ்ந்தது.

இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் ஆறாவது சீசன் தற்போது நடக்கிறது. சென்னையில் நேற்று நடந்த லீக் போட்டியில் 'பி' மண்டலத்தில் இடம் பெற்ற தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

தமிழ் தலைவாஸ் அணிக்கு ஜஸ்விர் சிங் முதல் புள்ளி பெற்றுத் தந்தார். இதன் பின் வழக்கம் போல தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் தவறுகள் செய்தனர். கேப்டன் அஜய் தாகூர் இரண்டு புள்ளிகள் பெற்று ஆறுதல் தர 10-7 என சற்று முன்னிலை பெற்றது.

இந்நிலையில் ராகேஷ் எடுத்த மூன்று புள்ளிகள் காரணமாக ஆல் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பியது பெங்கால். முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 15-18 என்ற நிலைக்கு சென்றது. இரண்டாவது பாதியிலும் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் ஏமாற்ற 9 புள்ளிகள் (19-28) பின் தங்கியது. இதன் பின் கடைசி வரை மீண்டு வராத தமிழ் தலைவாஸ் அணி 27-36 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்தது.

கடந்த சீசனில் 5 (தோல்வி), இம்முறை 5 என சொந்த மண்ணில் தமிழ் தலைவாஸ் பங்கேற்ற 10 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றது. 9ல் தோல்வியடைந்து ஏமாற்றியது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில் நடப்பு சாம்பியன் பாட்னா அணி, 43-41 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி., அணியை வீழ்த்தியது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement