Advertisement

யூத் ஒலிம்பிக்: அரையிறுதியில் லக்சயா

பியுனஸ் ஏர்ஸ்: யூத் ஒலிம்பிக்கில் இந்திய பாட்மின்டன் வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார்.

அர்ஜென்டினா தலைநகர் பியுனஸ் ஏர்சில், 3வது யூத் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் ஆண்களுக்கான பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், இந்தோனேஷியாவின் இக்சன் லியோனார்டோ மோதினர். அபாரமாக ஆடிய லக்சயா சென் 21-17, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஹாக்கியில் ஏமாற்றம்

பெண்களுக்கான (5 பேர்) ஹாக்கி லீக் போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 2-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் மும்தாஸ் கான், ரீத் தலா ஒரு கோலடித்தனர். முதல் மூன்று போட்டியில் வெற்றி கண்ட இந்திய அணி, காலிறுதிக்கு தகுதி பெற்றது.

ஆண்களுக்கான ஹாக்கி லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. இந்தியா சார்பில் விவேக் சாகர் பிரசாத் 2, ஷிவம் ஆனந்த் ஒரு கோலடித்தனர். முதல் மூன்று போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி காலிறுதிக்குள் நுழைந்தது.

அர்ச்சனா தோல்வி

பெண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் அர்ச்சனா காமத், ருமேனியாவின் ஆன்ட்ரியா டிராகோமன் மோதினர். இதில் அர்ச்சனா 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement